தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

சங்ககிரி அருகே மினி ஆட்டோ மீது டேங்கர் லாரி மோதல்: இருவர் பலி, 4 பேர் காயம்

சங்ககிரி அருகே உள்ள சுண்ணாம்புகுட்டை பகுதியில் டேங்கர் லாரியும், மினி ஆட்டோவும் மோதிக்கொண்டதில் மினி ஆட்டோவில் பயணம் செய்த கட்டிட பொறியாளர் உள்பட இருவர் உயிரிழந்தனர்.

News image
சங்ககிரி அருகே உள்ள சுண்ணாம்புகுட்டை பகுதியில் செவ்வாய்க்கிழமை டேங்கர் லாரியும், மினி ஆட்டோவும் மோதிக்கொண்டதில் சேதமடைந்த மினி ஆட்டோ.
Updated On :28 செப்டம்பர் 2021, 9:27 am

DIN

சங்ககிரி: சேலம் மாவட்டம், சங்ககிரி அருகே உள்ள சுண்ணாம்புகுட்டை பகுதியில் டேங்கர் லாரியும், மினி ஆட்டோவும் மோதிக்கொண்டதில் மினி ஆட்டோவில் பயணம் செய்த கட்டிட பொறியாளர் உள்பட இருவர் உயிரிழந்தனர். அதில் பயணம் செய்த 4 பேர் பலத்த காயமடைந்தனர்.

சேலம் மாவட்டம், மேட்டூர், சாம்பள்ளி பகுதியைச் சேர்ந்த கட்டட பொறியாளர் கோபால் (52) சங்ககிரி பகுதியில் தனியார் கட்டிடங்களை கட்டும் பணிகளில்  ஈடுபட்டு வந்துள்ளார்.

வழக்கம்போல் அவர் மேட்டூர் பகுதியைச் சேர்ந்த கட்டிட கூலித்தொழிலாளர் ஐந்து பேரை அவரது மினி ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு எடப்பாடியிலிருந்து சங்ககிரி நோக்கி ஓட்டி வந்து கொண்டிருந்துள்ளார். அப்போது சங்ககிரி அருகே உள்ள சுண்ணாம்புகுட்டை  பகுதியில் செல்லும் போது சங்ககிரியிலிருந்து எடப்பாடி நோக்கி சென்ற டேங்கர் லாரி எதிர்பாரதவிதமாக மினி ஆட்டோ மீது மோதியதில்  ஆட்டோவில் பயணம் செய்த கட்டட பொறியாளர் கோபால் (52) அவரது உறவினர்  அழகேசன் (50) ஆகியோர் நிகழ்விடத்திலேயே பலியாகினர்.

இதில் பலத்த காயமடைந்த நான்கு பேர் மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.  

இது குறித்து சங்ககிரி காவல்துறையினர்  வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.