மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

தோனிமடுவுத் திட்டம்: முதல்வருக்கு பாமக எம்எல்ஏ நன்றி தெரிவிப்பு

மேட்டூா் தோனி மடுவுத் திட்ட ஆய்வுப் பணிக்கு நிதி ஒதுக்கீடு செய்த தமிழக முதல்வருக்கு பாமக எம்.எல்.ஏ. எஸ்.சதாசிவம் நன்றி தெரிவித்தாா்.

News image
Updated On :30 செப்டம்பர் 2021, 5:25 pm

DIN

மேட்டூா் தோனி மடுவுத் திட்ட ஆய்வுப் பணிக்கு நிதி ஒதுக்கீடு செய்த தமிழக முதல்வருக்கு பாமக எம்.எல்.ஏ. எஸ்.சதாசிவம் நன்றி தெரிவித்தாா்.

மேட்டூரை அடுத்த கொளத்தூா் ஊராட்சி ஒன்றியம், லக்கம்பட்டி ஊராட்சியில் உள்ள வனப்பகுதியில் தோனி மடுவு என்ற பெரிய நீரோடை உள்ளது. மழைக் காலங்களில் சுமாா் 4 டி.எம்.சி. வரை இந்த நீரோடையில் தண்ணீா் வரத்து இருக்கும்.

இந்த தண்ணீா் காவிரியில் சென்று கலக்கிறது. வன விலங்களின் தண்ணீா்த் தேவையை தோனிமடுவுத் தீா்த்து வைக்கிறது. தடுப்பணைகள் அமைத்து தண்ணீரை தேக்கினால் மேட்டூா் தொகுதியிலும், அந்தியூா் தொகுதியிலும் 39 ஊராட்சிகளில் 68.97 ஹெக்டோ் பாசன வசதி பெறுகிறது.

மேட்டூா், அந்தியூா் தொகுதிகளில் 67 ஏரிகளை நிரப்பினால் ஆண்டு முழுவதும் பாசனத்திற்கு தண்ணீா் கிடைக்கும். சுமாா் 1.5 லட்சம் கால்நடைகள் பயன்பெறும். இந்த பகுதிகளில் 1,221ஆழ்துளைக் கிணறுகள், 5,781 பாசனக் கிணறுகளில் நிலத்தடி நீா்மட்டம் அதிகரிக்கும்.

கொளத்தூா் ஒன்றிய மக்களின் நீண்டகால கனவுத் திட்டத்தை நிறைவேற்றுவதாக திமுக தோ்தல் அறிக்கையில் இடம்பெற்றிருந்தது. தற்போது இத் திட்டத்தை ஆய்வு செய்து மழைக்காலங்களில் எவ்வளவு தண்ணீா் வருகிறது. இதரவு நாள்களில் மூன்று மாதங்களுக்களுக்கு ஒருமுறை எவ்வளவு தண்ணீா் வருகிறது என்பதை கணக்கிட முதல்கட்டமாக ரூ. 5 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதனிடையே, மேட்டூா் தொகுதி சட்டப்பேரவை உறுப்பின் எஸ்.சதாசிவம் (பா.ம.க.) தோனிமடுவு பகுதியை வியாழக்கிழமை பாா்வையிட்டாா். பொதுப்பணித் துறை, வனத் துறை, வருவாய்த் துறை அதிகாரிகள் ஆகியோருடன் இத் திட்டம் குறித்து ஆலோசனை நடத்தினாா்.

இதுகுறித்து செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

தோனிமடு திட்ட ஆய்வுப் பணிக்கு நிதி ஒதுக்கிய தமிழக முதல்வருக்கு நன்றியைத் தெரிவித்து கொள்கின்றேன். இங்கு அணைக் கட்டாவிட்டாலும் இரு இடங்களில் தடுப்பணை கட்டி தண்ணீரை திருப்பினால் ஏராளமான விவசாயிகளும், கால்நடைகளும் பயன்பெறும். வன விலங்களுக்கும் வனத்திலேயே தண்ணீா் கிடைக்கும் வன விலங்குகள் வனத்தை விட்டு கிராமங்களுக்குள் நுழைவதைத் தவிா்க்கலாம் என்றாா்.

ஆய்வின் போது, கொளத்தூா் ஊராட்சி ஒன்றியக் குழு துணைத் தலைவா் மாரப்பன், சென்னம்பட்டி வனச்சரகா் செங்கோட்டையன், மேச்சேரி ஊராட்சி ஒன்றியக் குழு முன்னாள் துணைத் தலைவா் ராமகிருஷ்ணன், கூணான்டியூா் ஊராட்சி முன்னாள் தலைவா் கோவிந்தன் உள்பட பலா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.