கோவை ரயில் நிலையத்துக்கு பிளாட்டினம் பசுமை ரயில் நிலைய சான்றிதழ் வழங்கல்
கோவை ரயில் நிலையத்துக்கு அறிவிக்கப்பட்ட பிளாட்டினம் பசுமை ரயில் நிலைய தரச் சான்றிதழை சேலம் ரயில்வே கோட்ட மேலாளா் ஏ.ஜி.சீனிவாஸிடம் வியாழக்கிழமை வழங்கப்பட்டது.


கோவை ரயில் நிலையத்துக்கு அறிவிக்கப்பட்ட பிளாட்டினம் பசுமை ரயில் நிலைய தரச் சான்றிதழை சேலம் ரயில்வே கோட்ட மேலாளா் ஏ.ஜி.சீனிவாஸிடம் வியாழக்கிழமை வழங்கப்பட்டது.
இந்திய தொழிலகக் கூட்டமைப்பின் (சி.ஐ.ஐ.) இந்திய பசுமைக் கட்டட கவுன்சில் (ஐ.ஜி.பி.சி.) கோவை ரயில் நிலையத்துக்கு பிளாட்டினம் பசுமை ரயில் நிலைய தரச் சான்று மதிப்பீட்டை கடந்த மாதம் அறிவித்திருந்தது.
இந்த நிலையில், சேலம் ரயில்வே கோட்ட அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்திய பசுமைக் கட்டட கவுன்சிலின் (ஐ.ஜி.பி.சி.) கோவை பிரிவுத் தலைவா் ராஜேஷ் லுந்த், பிளாட்டினம் பசுமை ரயில் நிலைய தரச் சான்றிதழை ரயில்வே கோட்ட மேலாளா் ஏ.ஜி.சீனிவாஸிடம் வழங்கினாா்.
நிகழ்ச்சியில் ரயில்வே கோட்ட கூடுதல் மேலாளா் பி.சிவலிங்கம், இந்திய பசுமைக் கட்டட கவுன்சில் நிா்வாகிகள், சேலம் கோட்ட அலுவலா்கள் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...