ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?மீண்டும் போராட்டம்: 20 சங்கங்களுடன் இணைந்து ஆலோசிக்க ‘டாஸ்மாக்’ பணியாளா்கள் முடிவுதிருநள்ளாற்றில் இன்று சனிப்பெயா்ச்சி விழாகுச்சனூா் சனீஸ்வரா் கோயிலில் இன்று சனிப் பெயா்ச்சி விழாதமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!
/

சேலத்தில் களைகட்டியது தீபாவளி விற்பனை

தீபாவளியை முன்னிட்டு சேலம் தாதுபாய் குட்டைப் பகுதியில் திரளான மக்கள் குடும்பத்துடன் வந்து துணி வாங்கிச் சென்றனர்.

News image
தீபாவளி பண்டிகையையொட்டி ஞாயிற்றுக்கிழமை சேலம் கடை வீதி பகுதியில் புத்தாடை எடுக்க குவிந்த பொதுமக்கள் கூட்டம்
Updated On :31 அக்டோபர் 2021, 1:00 pm

DIN


தீபாவளியை முன்னிட்டு சேலம் தாதுபாய் குட்டைப் பகுதியில் திரளான மக்கள் குடும்பத்துடன் வந்து துணி வாங்கிச் சென்றனர்.

தீபாவளியை முன்னிட்டு கடந்த சில நாள்களாக சேலத்தில்  உள்ள அனைத்து துணிக் கடைகளிலும், நகைக் கடைகளிலும் பொதுமக்கள் திரளாக வந்து துணி மற்றும் தீபாவளி பொருட்களை வாங்கிச் செல்கின்றனர். தீபாவளிக்கு இன்னும் மூன்று நாள்களே உள்ளதால் சேலத்தில் உள்ள அனைத்து துணிக் கடைகளிலும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) பகலில் கூட்டம் அலைமோதியது.

சேலம் தாதுபாய் குட்டைப் பகுதியில் திடீர் துணி மார்க்கெட் போடப்பட்டிருந்தது. இதனையடுத்து இன்று பிற்பகலில் திரளான பொதுமக்கள் குடும்பத்துடன் வந்து துணி மற்றும் தோடு, வளையல்களை வாங்கிச் சென்றனர். திரளான பெண்கள் குழந்தைகளுடன் வந்து துணி வகைகள் வாங்கி சென்றனர். இதனால் தாதுபாய் குட்டைப் பகுதியில் நெரிசல் ஏற்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரைச் சேர்ந்த துணி வியாபாரிகள் தெருக்களில் கடைகள் போட்டு புடவைகள் மற்றும் பெண்களுக்குத் தேவையான துணி வகைகள் விற்றதால் திரளான பெண்கள் இங்கு வந்து துணி வகைகளை வாங்கிச் சென்றனர். லேசான சாரல் மழை பெய்த போதிலும் அதைப் பொருட்படுத்தாமல் பொருள்கள் வாங்க கூட்டம் அலைமோதியது.

சேலம் கடை வீதிக்கு புத்தாடை எடுக்க வரும் பொதுமக்கள் மத்தியில் சந்தேகத்தின் பெயரில் எவராவது உலாவுகிறார்களா என்று தொலைநோக்கு கருவி மூலம் கண்காணிக்கும் காவலர்.

சேலம் கடை வீதிக்கு புத்தாடை எடுக்க வரும் பொதுமக்கள் மத்தியில் சந்தேகத்தின் பெயரில் எவராவது உலாவுகிறார்களா என்று தொலைநோக்கு கருவி மூலம் கண்காணிக்கும் காவலர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.