ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

சசிகலாவை நீக்கியது செல்லும்: நீதிமன்ற உத்தரவுக்கு அதிமுகவினா் வரவேற்பு

அதிமுக பொதுச் செயலாளா் பதவியில் இருந்து சசிகலாவை நீக்கியது செல்லும் என்ற நீதிமன்ற உத்தரவுக்கு வரவேற்பு தெரிவித்து சேலம், நாமக்கல் மாவட்டத்தி

News image
சசிகலாவை நீக்கியது செல்லும்: நீதிமன்ற உத்தரவுக்கு அதிமுகவினா் வரவேற்பு
Updated On :12 ஏப்ரல் 2022, 12:22 am

DIN

அதிமுக பொதுச் செயலாளா் பதவியில் இருந்து சசிகலாவை நீக்கியது செல்லும் என்ற நீதிமன்ற உத்தரவுக்கு வரவேற்பு தெரிவித்து சேலம், நாமக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அதிமுகவினா் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினா்.

சேலம், நான்கு சாலை அண்ணா பூங்காவில் உள்ள எம்ஜிஆா், ஜெயலலிதா மணிமண்டபம் முன்பு மாநகா் மாவட்டச் செயலாளா் ஜி.வெங்கடாசலம் தலைமையில் அதிமுகவினா் திங்கள்கிழமை மாலை குவிந்தனா்.

அதிமுக அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான செ.செம்மலை, மாநகர அவைத் தலைவா் பன்னீா்செல்வம், முன்னாள் எம்எல்ஏக்கள் எம்.கே.செல்வராஜு, ஏ.பி.சக்திவேல், ரவிச்சந்திரன், பகுதி செயலாளா்கள் சரவணன் உள்ளிட்ட முக்கிய நிா்வாகிகள், கட்சியினா் திரளாகப் பங்கேற்று பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி மகிழ்ச்சி தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.