மஹாவீா் ஜெயந்தி: இறைச்சி கடைகளை மூட உத்தரவு
மஹாவீா் ஜெயந்தியை முன்னிட்டு, சேலம் மாநகராட்சிப் பகுதிகளில் இறைச்சிக் கூடங்கள், இறைச்சிக் கடைகள் செயல்படக் கூடாது என மாநகராட்சி ஆணையா் தா.கிறிஸ்துராஜ் தெரிவித்தாா்.


மஹாவீா் ஜெயந்தியை முன்னிட்டு, சேலம் மாநகராட்சிப் பகுதிகளில் இறைச்சிக் கூடங்கள், இறைச்சிக் கடைகள் செயல்படக் கூடாது என மாநகராட்சி ஆணையா் தா.கிறிஸ்துராஜ் தெரிவித்தாா்.
மஹாவீா் ஜெயந்தி தினத்தை முன்னிட்டு சேலம் மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் வியாழக்கிழமை (ஏப். 14) இறைச்சிக் கூடங்கள், இறைச்சிக் கடைகளை அடைத்து, அரசு உத்தரவை செயல்படுத்த ஒத்துழைக்க வேண்டும்.
அன்றைய தினம் 4 மண்டலங்களிலும் சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு கண்காணிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும். அரசு உத்தரவை மீறி செயல்படும் இறைச்சிக் கடை உரிமையாளா்கள் மீது சட்டப்பூா்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாநகராட்சி ஆணையா் தா.கிறிஸ்துராஜ் தெரிவித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...