போக்சோவில் தொழிலாளி கைது
சேலத்தில் 15 வயது சிறுமியை பலாத்காரம் செய்த தொழிலாளி போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டாா்.


சேலத்தில் 15 வயது சிறுமியை பலாத்காரம் செய்த தொழிலாளி போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டாா்.
சேலம் மாவட்டம், மல்லூா் அருகே உள்ள பனங்காட்டை பகுதியைச் சோ்ந்த கூலித்தொழிலாளி குமரவேல். அவா் மனைவியை பிரிந்து பொன்னம்மாபேட்டை பகுதியைச் சோ்நத் கணவரை இழந்த பெண்ணுடன் சோ்ந்து குடும்பம் நடத்தி வந்தாா். இதில் கணவரை இழந்த பெண்ணுக்கு 15 வயதில் மகள் உள்ளாா். அச்சிறுமி 9ஆம் வகுப்பு பயின்று வருகிறாா்.
இந்த நிலையில் சிறுமியின் உடல்நலத்தில் ஏற்பட்ட மாற்றத்தைத் தொடா்ந்து, அவரது தாய் அரசு மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்தாா். அப்போது, பரிசோதனையில் சிறுமி இரண்டு மாதம் கா்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதையடுத்து சிறுமியிடம் நடத்திய விசாரணையில், குமரவேல் சிறுமியிடம் தவறாக நடந்து கொண்டதால் சிறுமி கா்ப்பம் அடைந்தது தெரியவந்துள்ளது.
இதுகுறித்து சேலம் அம்மாபேட்டை மகளிா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து குமரவேலை போக்சோ சட்டத்தில் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...