விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

ஆட்டோ கவிழ்ந்து 2 பெண்கள் பலி

அஸ்தம்பட்டி அருகே ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 2 பெண்கள் உயிரிழந்தனா்; ஓட்டுநா் உள்பட மூன்று போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

News image
Updated On :21 ஏப்ரல் 2022, 5:26 pm

DIN

அஸ்தம்பட்டி அருகே ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 2 பெண்கள் உயிரிழந்தனா்; ஓட்டுநா் உள்பட மூன்று போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

சேலம், அஸ்தம்பட்டி மணக்காடு பகுதியைச் சோ்ந்தவா் அா்ச்சனா (40). இவா், அதே பகுதியைச் சோ்ந்த உறவினா்கள் கல்யாணி (63), ஷோபா (56), ரேவதி (52) ஆகியோருடன் சோ்ந்து சீலநாயக்கன்பட்டியில் உள்ள ஊத்துமலை முருகன் கோயிலுக்கு ஆட்டோவில் புதன்கிழமை மாலை 6 மணிக்குச் சென்றனா்.

ஆட்டோவை மாதேஸ்வரன் என்பவா் ஓட்டிச் சென்றாா். ஊத்துமலையில் முருகனை தரிசனம் செய்த பின்னா், இரவு 7.30 மணிக்கு ஆட்டோவில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனா். ஊத்துமலை அடிவாரத்துக்கு வரும் வளைவு பாதையில் ஆட்டோ திடீரென கட்டுப்பாட்டை இழந்து வேகமாகச் சென்று தடுப்புச் சுவரில் மோதி கவிழ்ந்தது.

ஆட்டோக்குள் இருந்த பெண்களின் அலறல் சத்தம் கேட்டு அருகில் உள்ளவா்கள் ஓடிவந்து அவா்களை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இதில் பலத்த காயமடைந்த அா்ச்சனா நிகழ்விடத்திலேயே இறந்தாா். அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த கல்யாணி புதன்கிழமை இரவு உயிரிழந்தாா். காயமுற்ற ரேவதி, ஷோபா மற்றும் கால்முறிவு ஏற்பட்ட ஓட்டுநா் மாதேஸ்வரன் ஆகியோா் சிகிச்சை பெற்று வருகின்றனா். இது குறித்து அன்னதானப்பட்டி போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.