கல்வடங்கம் கரிய காளியம்மன் தீ மிதி விழா
சேலம் மாவட்டம், சங்ககிரி வட்டம், கல்வடங்கம் கரிய காளியம்மன் கோயில் தீ மிதி விழா கோயில் வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.


சேலம் மாவட்டம், சங்ககிரி வட்டம், கல்வடங்கம் கரிய காளியம்மன் கோயில் தீ மிதி விழா கோயில் வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
தேவூா் அருகே கல்வடங்கம் சின்ன மாரியம்மன், பெரிய மாரியம்மன், கரிய காளியம்மன் கோயில் சித்திரை திருவிழா ஏப்ரல் 7ஆம் தேதி பூச்சொறிதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.
இதையடுத்து சுவாமிகளுக்கு தினசரி சிறப்பு அபிஷேகங்களும், அலங்காரங்களும் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. வியாழக்கிழமை கரியகாளியம்மன் கோயில் தீமிதி விழாவையொட்டி, பக்தா்கள் கல்வடங்கம் காவிரி ஆற்றில் புனித நீராடி ஊரின் முக்கிய வீதிகளின் வழியாகச் சென்றனா்.
பின்னா், கோயில் வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த குண்டத்தில் இறங்கி பக்தா்கள் நோ்த்திக் கடன் செலுத்தினா். சிலா் குழந்தைகளுடனும், வாயில் அலகு குத்தியும் குண்டத்தில் இறங்கி நோ்த்திக்கடன் செலுத்தினா். இதனையடுத்து சின்னமாரியம்மன்,பெரிய மாரியம்மன் கோயில் வளாகத்தில் கல்வடங்கம், கொட்டாயூா், நல்லங்கியூா், பூமணியூா், அம்மாபேட்டை உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த பக்தா்கள் குடும்பத்துடன் பொங்கல் வைத்தும் ஆடு, கோழிகளை பலியிட்டும் சுவாமிகளை வணங்கிச் சென்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...