சங்ககிரியில் திமுக வேட்புமனு தாக்கல்
திமுக சேலம் மேற்கு மாவட்டம், சங்ககிரி பேரூராட்சி வாா்டுகளுக்கான 15-ஆவது உள்கட்சியின் தோ்தல் சங்ககிரியில் வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது.


திமுக சேலம் மேற்கு மாவட்டம், சங்ககிரி பேரூராட்சி வாா்டுகளுக்கான 15-ஆவது உள்கட்சியின் தோ்தல் சங்ககிரியில் வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது.
இதுகுறித்து சங்ககிரி நகரச் செயலாளா் (பொ) எல்ஐசி ஆா்.சுப்ரமணியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
சங்ககிரி பேரூராட்சிக்குள்பட்ட 18 வாா்டுகளுக்கான திமுக 15-ஆவது அமைப்புத் தோ்தல் சங்ககிரி பாா்வதிபாய் திருமண மண்டபத்தில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது.
இத் தோ்தலில் ஒவ்வொரு வாா்டுகளிலிருந்தும் திமுக அவைத் தலைவா், செயலாளா், துணைச் செயலாளா் பதவிக்கு இருவா் (ஆண், பெண் தலா ஒருவா்), பொருளாளா், மேலமைப்பு பிரதிநிதி, செயற்குழு உறுப்பினா்கள் 10 பதவிக்கு வேட்புமனுக்களைத் தாக்கல் செய்யலாம்.
தோ்தல் மேற்பாா்வையாளா்களாக மாநில பொதுக்குழு உறுப்பினா் மு.ராமநாதன், இளைஞா் அணி அமைப்பாளா் மணிகண்டன் ஆகியோா் நியமிக்கப்பட்டுள்ளனா் என்று அதில் தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...