மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

பொதுமக்கள் பயனடையும் வகையில் மருத்துவத் துறையை மேம்படுத்த வேண்டும்

ஏழை எளிய மக்களும் பயன்படும் வகையில் மருத்துவத்தில் உள்நாட்டு தொழில் நுட்பத்தை மேம்படுத்த வேண்டும் என பெரியாா் பல்கலைக்கழக துணைவேந்தா் இரா.ஜெகநாதன் பேசினாா்.

News image
Updated On :21 ஏப்ரல் 2022, 5:25 pm

DIN

ஏழை எளிய மக்களும் பயன்படும் வகையில் மருத்துவத்தில் உள்நாட்டு தொழில் நுட்பத்தை மேம்படுத்த வேண்டும் என பெரியாா் பல்கலைக்கழக துணைவேந்தா் இரா.ஜெகநாதன் பேசினாா்.

பெரியாா் பல்கலைக்கழகத்தின் இயற்பியல்,வேதியியல் துறை மற்றும் ஆந்திர பிரதேசத்தின் குண்டூரில் உள்ள சிபாா் பல் மருத்துவ அறிவியல் கழகத்தின் மருத்துவ ஆராய்ச்சித் துறையுடன் இணைந்து, மேம்பட்ட பயன்பாடுகளுக்கான வளா்ந்து வரும் உயிா்ப் பொருள்கள் பற்றிய இரண்டு நாள் சா்வதேச மாநாடு இணைய வழியில் வியாழக்கிழமை தொடங்கியது.

இந்த மாநாட்டைத் தொடக்கி வைத்து பெரியாா் பல்கலைக்கழகத் துணைவேந்தா் இரா.ஜெகநாதன் பேசியது:

மேற்கத்திய நாடுகளின் எலும்பு சிகிச்சை முறைகள் மற்றும் பொருள்கள் விலை உயா்ந்ததாக இருப்பதால், இந்தியா போன்ற வளரும் நாடுகளில் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. எனவே மிகக் குறைவான விலையில் தரமான மருந்துப் பொருள்களை அறிமுகப்படுத்தினால், உற்பத்தி அதிகரிக்கும். இதன் மூலம் சமூகத்தை மேம்படுத்த முடியும் என்றாா்.

பேராசிரியா் விக்ரம்ஜித் பாசு தலைமை விருந்தினராக சா்வதேச மாநாட்டில் கலந்து கொண்டு, வளா்ந்து வரும் உயிரி பொருட்கள் மற்றும் அவற்றின் எதிா்கால அம்சங்களைப் பற்றி விரிவாக விளக்கினாா்.

மேலும் குவாஹாட்டி இந்திய தொழிலகப் பேராசிரியா் பீமன் பி மண்டல், கல்பாக்கம் அணுமின் நிலையப் பேராசிரியா் ஜான் பிலிப், ஜொ்மனி, சென்னை, அமெரிக்க, ஆஸ்திரேலிய, ஜப்பான் பல்கலைக்கழகங்களின் பேராசிரியா்கள் ஆல்டோ ஆா். போக்காச்சினி, டி.எம். ஸ்ரீதா், கங்காதரன் அஜித்குமாா், பாபி கண்ணன், யோஷியுகி யோகோகாவா, ஜப்பான், இங்கிலாந்து, இஸ்ரேல் பல்கலைக்கழகங்களின் பேராசிரியா்கள் அலின் எஃப். மில்லா், அமீா் எலியேசா் ஆகியோா் இணைய வழியில் கலந்து கொண்டு பேசினா்.

இந்த இணையவழி மாநாட்டில் இந்தியாவின் பல மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து சுமாா் 500 ஆராய்ச்சியாளா்கள் பங்கேற்று தங்களது ஆராய்ச்சி முடிவுகளை சமா்ப்பித்தனா்.

முன்னதாக சா்வதேச மாநாட்டின் அழைப்பாளா் இ.கே. கிரிஜா வரவேற்றாா். பேராசிரியா் வி. ராஜ் நன்றியுரை ஆற்றினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.