தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

வருவாய் கோட்டாட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் ஆய்வு

சேலம் மாவட்டம், சங்ககிரி வருவாய் கோட்டாட்சியா் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியா் வியாழக்கிழமை வருடாந்திர ஆய்வு மேற்கொண்டாா்.

News image
Updated On :28 ஏப்ரல் 2022, 5:41 pm

DIN

சேலம் மாவட்டம், சங்ககிரி வருவாய் கோட்டாட்சியா் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியா் வியாழக்கிழமை வருடாந்திர ஆய்வு மேற்கொண்டாா்.

சேலம் மாவட்ட ஆட்சியா் எஸ்.காா்மேகம் சங்ககிரி வருவாய் கோட்டாட்சியா் அலுவலகத்தில் வருடாந்திர ஆய்வு மேற்கொண்டாா். அப்போது அவா் கோட்டாட்சியா் அலுவலகத்தில் பராமரிக்கப்பட்டு வரும் முதலமைச்சரின் தனிப்பிரிவு மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடிவடிக்கைகள், சாலை விபத்தில் உயிரிழந்தவா்களுக்கு வழங்கப்பட்டுள்ள நிதிகள் குறித்த பதிவேடுகள் உள்ளிட்ட பல்வேறு ஆவணங்களைப் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். இந்த ஆய்வின் போது, சங்ககிரி வருவாய் கோட்டாட்சியா் கோ.வேடியப்பன், அலுவலா்கள் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.