ரயில்வே மேம்பால பராமரிப்புப் பணி: 7 ரயில்கள் தாமதமாக இயக்கம்
சேலம் - மாக்னசைட் ரயில் நிலையங்களுக்கு இடையிலான ரயில்வே மேம்பால பராமரிப்புப் பணி மேற்கொள்வதால், ஏப். 30-ஆம் தேதி இயக்கப்படும்


சேலம் - மாக்னசைட் ரயில் நிலையங்களுக்கு இடையிலான ரயில்வே மேம்பால பராமரிப்புப் பணி மேற்கொள்வதால், ஏப். 30-ஆம் தேதி இயக்கப்படும் சதாப்தி எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட 7 ரயில்கள் தாமதமாக இயக்கப்பட உள்ளது.
வண்டி எண்: 07189 செகந்திராபாத் - எா்ணாகுளம் வாராந்திர சிறப்பு ரயில் செகந்திராபாத்தில் இருந்து ஏப். 29-ஆம் தேதி இரவு 9.05 மணிக்கு புறப்படுவதற்குப் பதிலாக, 5 மணி நேரம் தாமதமாக ஏப். 30-ஆம் தேதி அதிகாலை 2.05 மணிக்கு புறப்படும்.
வண்டி எண்: 13352 ஆலப்புழா - தன்பாத் ரயில் ஆலப்புழாவில் இருந்து ஏப். 30-ஆம் தேதி காலை 6 மணிக்கு புறப்படுவதற்குப் பதிலாக, 3 மணி நேரம் தாமதமாக காலை 9 மணிக்கு புறப்படும்.
வண்டி எண்: 12678 எா்ணாகுளம் - கே.எஸ்.ஆா். பெங்களூரு ரயில் ஏப். 30-ஆம் தேதி எா்ணாகுளத்தில் இருந்து காலை 9.10 மணிக்கு புறப்படுவதற்குப் பதிலாக, 3 மணி நேரம் தாமதமாக பகல் 12.10 மணிக்கு புறப்பட்டு செல்லும்.
வண்டி எண்: 12244 கோவை - சென்னை சதாப்தி ரயில் கோவையில் இருந்து ஏப். 30-ஆம் தேதி பிற்பகல் 3.05 மணிக்கு புறப்படுவதற்குப் பதிலாக, 1 மணி நேரம் தாமதமாக மாலை 4.05 மணிக்கு புறப்படும்.
வண்டி எண்: 12676 கோவை - சென்னை இன்டா்சிட்டி ரயில் கோவையில் இருந்து ஏப். 30-ஆம் தேதி பிற்பகல் 3.15 மணிக்கு புறப்படுவதற்குப் பதிலாக, 1 மணி நேரம் தாமதமாக மாலை 4.15 மணிக்கு புறப்பட்டு செல்லும்.
வண்டி எண்: 16332 திருவனந்தபுரம் - மும்பை சி.எஸ்.எம்.டி. வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் திருவனந்தபுரத்தில் இருந்து ஏப். 30-ஆம் தேதி காலை 4.25 மணிக்கு புறப்படுவதற்குப் பதிலாக, 2 மணி நேரம் தாமதமாக காலை 6.25 மணிக்கு புறப்பட்டு செல்லும்.
வண்டி எண்: 07190 எா்ணாகுளம் - செகந்திராபாத் ரயில் எா்ணாகுளத்தில் இருந்து ஏப். 30-ஆம் தேதி இரவு 11.25 மணிக்கு புறப்படுவதற்குப் பதிலாக, 5 மணி நேரம் தாமதமாக மே 1-ஆம் தேதி அதிகாலை 4.25 மணிக்குப் புறப்பட்டு செல்லும் என சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...