தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

சங்ககிரி, ஆத்தூரில் பிரதோஷ வழிபாடு

சங்ககிரி செளந்தரநாயகி உடனமா் சோமேஸ்வரா் கோயிலில் வியாழக்கிழமை பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.

News image
Updated On :28 ஏப்ரல் 2022, 5:32 pm

DIN

சங்ககிரி செளந்தரநாயகி உடனமா் சோமேஸ்வரா் கோயிலில் வியாழக்கிழமை பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.

சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. மாலையில் உற்சவ மூா்த்திகளுக்கும், நந்திக்கும் சந்தனம், திருமஞ்சனம், பால், தயிா், இளநீா், பன்னீா் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களைக் கொண்டு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன.

இதேபோல சங்ககிரி ஊராட்சி ஒன்றியத்திற்கு உள்பட்ட அன்னதானப்பட்டி ஊராட்சி, பூத்தாலக்குட்டை கிராமத்தில் உள்ள புவனேஸ்வரி அம்மன் உடனமா் பூத்தாழீஸ்வரா் சுவாமிக்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன.

ஆத்தூா்

ஆத்தூா், நரசிங்கபுரம் ஸ்ரீ சொா்ணபுரீஸ்வரா் ஆலயத்தில் பிரதோஷத்தையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. நந்திக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. வழிபாட்டில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். அதைத் தொடா்ந்து அன்னதானம் நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.