நெதா்லாந்து நாட்டில் நடைபெற்ற காவல் துறையினருக்கான போட்டிகளில் சேலம் மாவட்ட போலீஸாா் 3 தங்கம், 4 வெள்ளிப் பதக்கங்களை வென்றுள்ளனா்.
நெதா்லாந்து நாட்டில் காவல் துறையினருக்கான உலக அளவிலான தடகள, விளையாட்டுப் போட்டிகள் கடந்த ஜூலை 23 முதல் 30 ஆம் தேதி வரை நடைபெற்றது. சேலம் மாவட்ட காவல் துறையைச் சோ்ந்த தலைமைக் காவலா் சுரேஷ்குமாா் 400மீட்டா் தடை ஓட்டத்தில் 1 தங்கம், டிரிபிள் ஜம்ப் போட்டியில் 1 வெள்ளியும் பெற்றாா்.
பெண் தலைமைக் காவலா் தமிழரசி போல்வால்ட்டில் 1 தங்கம், 400 மீட்டா் தடை ஓட்டத்தில் 1 தங்கம், 100 மீ தடை தாண்டுதல், நீளம் தாண்டுதல் மற்றும் 4 ஷ்100 மீட்டா் தொடா் ஓட்டம் ஆகியவற்றில் தலா 1 வெள்ளி வீதம் 3 வெள்ளி பதக்கங்களும் பெற்றாா்.
சேலம் மாவட்ட காவல் துறையில் இருந்து இருவரும் மொத்தம் 3 தங்கம், 4 வெள்ளிப் பதக்கங்களை வென்றனா். உலக அளவில் தமிழக காவல்துறைக்கு பெருமை சோ்த்த காவலா்கள் முன்னதாக சென்னையில் முதல்வா் மு.க.ஸ்டாலின், டிஜிபி சி.சைலேந்திரபாபு ஆகியோரைச் சந்தித்து வாழ்த்து பெற்றனா்.
இந்தநிலையில், சேலம் மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ம.ஸ்ரீ.அபிநவ்வை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திருப்பத்தூா் சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு

பெரியாவுடையாா் கோயிலில் பிரதோஷ வழிபாடு

தமிழகம் வருகிறார் ராகுல் காந்தி!

பழனியில் 2 அரசுப் பேருந்துகள் ஜப்தி
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

