டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

100 ஆண்டுகள் பழமையான புனித ஜெயராக்கினி அன்னை ஆலயத்தில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்

ஆத்தூரில் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த புனித ஜெயராக்கினி அன்னை ஆலயத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டம்.

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 11:11 am

DIN

ஆத்தூரில் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த புனித ஜெயராக்கினி அன்னை ஆலயத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டம் கிறிஸ்துமஸ் சிறப்பு திருப்பலியில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு  குழந்தை ஏசுவை வழிபட்டு அன்பை பரிமாரிக் கொண்டனர்.


இயேசுபிரான் அவதரித்த டிசம்பர் 25 ஆம் தேதி தினத்தன்று கிறிஸ்துமஸ் பண்டிகையாக உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் கொண்டாடுவது வழக்கம். இதனையடுத்து, இந்தாண்டும் நாளை வெள்ளிக்கிழமை கிறிஸ்தவர்கள் கோலாகலமாக கிறிஸ்துமஸ் கொண்டாட உள்ளனர்.தமிழகத்தை பொறுத்தவரையில் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி தேவாலயங்களில் சிறப்பு ஆராதனை நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடந்து வந்தது.

அந்தவகையில் சேலம் மாவட்டம் ஆத்தூரில் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த புனித ஜெயராக்கினி அன்னை ஆலயத்தில் குழந்தை இயேசு பிறப்பை எடுத்துரைக்கும் விதமாக குடில் அமைத்து மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டது.

 மேலும், ஆலயத்தில் வைக்கப்பட்டுள்ள உயரமான கிறிஸ்துமஸ் மரங்களும் மின் விளக்குகள் பளிச்சிட கண்ணைக் கவர்ந்த வண்ணமாக காணப்பட்டது,

 அதைத் தொடர்ந்து இரவு தொடங்கிய சிறப்பு பாடல் கிறிஸ்மஸ் பெருவிழா மிகச் சிறப்பாக பங்குத்தந்தை அருட்பணி கிரகோரி ராஜன் அவர்கள் தலைமையிலும் உதவி பங்கு தந்தை அருட்பணி மெசியா அவர்களும் இணைந்து கிறிஸ்துமஸ் பெரு விழா திருப்பலியை நிறைவேற்றி ஆலய வளாகத்தில்  குழந்தை இயேசுவை ஊர்வலமாக வலம் எடுத்து வந்து அங்கு உள்ள கிறிஸ்மஸ் குடிலில் வைத்து மந்திரித்து  கிறிஸ்மஸ் வாழ்த்துக்களை  கிறிஸ்துவ மக்களுக்கு தெரிவித்தனர்.

இந்த சிறப்பு திருப்பலி ஆராதனையில் 1000க்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் தங்களது குடும்பத்துடன் கலந்து கொண்டு புத்தாடை உடுத்தியும், இனிப்புகளை பகிர்ந்துகொண்டும்  கிறிஸ்து பிறப்பை உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.