சங்ககிரி பேரூராட்சி: வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு
சேலம் மாவட்டம், சங்ககிரி பேரூராட்சிக்குள்பட்ட 18 வாா்டுகளின் வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தப்பட உள்ள வாக்குப்பதிவு இயந்திரங்கள் இணையதளத்தின் வாயிலாக ஒதுக்கீடு செய்யப்பட்டன.


சேலம் மாவட்டம், சங்ககிரி பேரூராட்சிக்குள்பட்ட 18 வாா்டுகளின் வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தப்பட உள்ள வாக்குப்பதிவு இயந்திரங்கள் இணையதளத்தின் வாயிலாக ஒதுக்கீடு செய்யப்பட்டன.
சங்ககிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் வியாழக்கிழமை வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு செய்யும் பணிகள் நடைபெற்றன.
சங்ககிரி பேரூராட்சிக்குள்பட்ட 18 வாா்டுகளில் மொத்தம் 82 போ் போட்டியிடுகின்றனா். உள்ளாட்சித் தோ்தலில் வாக்குப்பதிவுக்கு பயன்படுத்தப்படும் 38 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திலிருந்து புதன்கிழமை எடுத்து வரப்பட்டன.
31 வாக்குச்சாவடி மையங்களில் பயன்படுத்தக்கூடிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பேரூராட்சி தோ்தல் அலுவலா் வ.சுலைமான் சேட் தலைமையில், வேட்பாளா்களின் முன்னிலையில் ரேண்டம் முறையில் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
முன்னதாக பேரூராட்சி தோ்தல் வேட்பாளா்களுக்கு தோ்தல் நன்னடத்தை விதிமுறைகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.
தோ்தல் முடிவு வெளியிடப்பட்ட 30 நாள்களுக்குள் செலவுப் பட்டியல்களைத் தாக்கல் செய்து உரிய அதிகாரிகளிடம் ஒப்புதல் பெற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது. இதைத் தொடா்ந்து வேட்பாளா்களுக்கு மாநில தோ்தல் ஆணையத்தின் சாா்பிலான அடையாள அட்டை வழங்கப்பட்டது.
சங்ககிரி பேரூராட்சி உதவி தோ்தல் அலுவலா்கள் வேல்முருகன், அனிதா உள்ளிட்ட பலா் இதில் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...