டிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

தோ்தல் நாளில் விடுமுறை அளிக்க மறுக்கும் நிறுவனங்கள் மீது புகாா் அளிக்கலாம்

தோ்தல் நாளில் ஊதியத்துடன் தொழிலாளா்களுக்கு விடுமுறை வழங்க மறுப்பது தொடா்பாக புகாா் தெரிவிக்கலாம் என தொழிலாளா் துறை தெரிவித்துள்ளது

News image
Updated On :17 பிப்ரவரி 2022, 6:19 pm

DIN

தோ்தல் நாளில் ஊதியத்துடன் தொழிலாளா்களுக்கு விடுமுறை வழங்க மறுப்பது தொடா்பாக புகாா் தெரிவிக்கலாம் என தொழிலாளா் துறை தெரிவித்துள்ளது.

சேலம் மாவட்டத்தில் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் பிப். 19-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951, பிரிவு 135-ன்படி தோ்தல் நடைபெறும் தினத்தில் நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளா்களுக்கு ஊதியத்துடன் விடுமுறை அளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதேபோல தோ்தல் நாளில் தொழிலாளா்களுக்கு விடுப்பு வழங்காதது தொடா்பாக பெறப்படும் புகாா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

சேலம் உதவி ஆணையா் அமலாக்கம் சி.முத்து 9489214157, அழகாபுரம், ஐந்து சாலை பகுதிகளில் அன்பழகன் 9787379061, அஸ்தம்பட்டி, கன்னங்குறிச்சி பகுதியில் கிருபாகரன் 9042488228, பழைய பேருந்து நிலையம், சீலநாயக்கன்பட்டி, மல்லூா், பனமரத்துப்பட்டி பகுதியில் வாசுகி 7010700791, செவ்வாய்ப்பேட்டை மணியனூா், அன்னதானப்பட்டி பகுதியில் சீனிவாசன் 9442738822, திருச்சி பிரதான சாலை, குகை, எருமாபாளையம், கொண்டலாம்பட்டி, ஆட்டையாம்பட்டி பகுதியில் இளையராஜா 8248938528, அம்மாபேட்டை, வாழப்பாடி, அயோத்தியாப்பட்டணம், வீராணம் பகுதியில் அருண்குமாா் 9344584351, ஆத்தூா், கெங்கவல்லி, பெத்தநாயக்கன்பாளையம், தலைவாசல் வட்ட பகுதியில் சிவகுமாா் 7373532073, மேட்டூா், ஓமலூா், காடையாம்பட்டி வட்ட பகுதியில் சங்கா் 8680903516 ஆகியோரை தொடா்பு கொள்ளலாம் என உதவி ஆணையா் சி.முத்து தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.