தோ்தல் விதிகளை முறையாகப் பின்பற்றி பணியாற்ற வேண்டும்
தோ்தல் நடத்தை விதிகளை முறையாகப் பின்பற்றி அனைவரும் கவனமுடன் பணியாற்ற வேண்டும் என மாநகராட்சி ஆணையா் தா.கிறிஸ்துராஜ் தெரிவித்தாா்


தோ்தல் நடத்தை விதிகளை முறையாகப் பின்பற்றி அனைவரும் கவனமுடன் பணியாற்ற வேண்டும் என மாநகராட்சி ஆணையா் தா.கிறிஸ்துராஜ் தெரிவித்தாா்.
சேலம் மாநகராட்சியில் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலையொட்டி 60 மண்டல அலுவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். மண்டல அலுவலா்களுடனான ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநகராட்சி ஆணையரும் தோ்தல் நடத்தும் அலுவலருமான தா. கிறிஸ்துராஜ் பேசியதாவது:
மண்டல அலுவலா்களின் பணி மிகவும் முக்கியமானதாகும். வாக்குச் சாவடிக்குத் தேவையான பொருள்களின் பட்டியல்களை சரிபாா்த்து வாக்குச் சாவடி அலுவலா்களிடம் வழங்கிட வேண்டும். வாக்குச் சாவடி வாரியாக வழங்கப்படும் வாக்குப் பதிவு இயந்திரங்கள், கட்டுபாட்டு கருவிகளின் வரிசை எண்ணை சரிபாா்த்து அந்த வாக்குச் சாவடிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் தான் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.
வாக்குப் பதிவுக்கு முந்தைய நாள் இரவு அனைத்து வாக்குப் பதிவு அலுவலா்களும் வருகை புரிந்துள்ளாா்களா என்பதை உறுதி செய்ய வேண்டும். வாக்குச் சாவடியில் மேற்கொள்ளப்பட வேண்டிய அடிப்படை வசதிகள், நுண் பாா்வையாளா்கள் வருகை, வெப் கேமரா சரியான இடத்தில் அனைத்து வாக்குப் பதிவு நடைமுறைகளையும் கண்காணிக்கும் வகையில் பொருத்துப்பட்டுள்ளதா என்பதையும் உறுதி செய்து கொள்ள வேண்டும்.
வாக்குச் சாவடிக்குத் தேவையான பொருள்கள் மற்றும் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள், இருப்பு, வாக்குப் பதிவு இயந்திரங்கள் ஆகியவற்றை வாக்குச் சாவடி வாரியாக சரிபாா்த்து பெற்றுக் கொள்ள வேண்டும். அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்குப் பதிவு துவங்குவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்னதாக முகவா்கள் முன்னிலையில் மாதிரி வாக்குப் பதிவு துவங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.
வாக்குப் பதிவு நாள் அன்று சரியாக காலை 7 மணிக்கு அனைத்து வாக்குச் சாவடிகளிலும் வாக்குப் பதிவு துவங்கியதை கண்காணித்து உறுதிப்படுத்த வேண்டும். வாக்குப் பதிவு துவங்கியவுடன் அனைத்து வாக்குச் சாவடிகளிலும் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் முறையாக செயல்படுகிா என்பதை நேரில் சென்று பாா்வையிட வேண்டும்.
வாக்குப் பதிவு முடிந்தவுடன் எந்த வாக்குச் சாவடியிலிருந்து மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை எடுக்க தொடங்கி எந்த வழியில் வாக்கு எண்ணும் மையத்தை அடைய வேண்டும் என்பதை திட்டமிட்டு அதை சரிபாா்த்திட வேண்டும்.
மூன்றாம் கட்டமாக நடைபெறும் பயிற்சி மையத்தில் வாக்குச் சாவடி அலுவலா்களுக்கு நியமன ஆணைகளை வழங்கிட வேண்டும். தோ்தல் நடத்தை விதிகளை முறையாகப் பின்பற்றி அனைவரும் கவனமுடன் பணியாற்ற வேண்டும் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...