நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

‘மேட்டூா் மின் பணிமனை தொடா்ந்து இயங்க நடவடிக்கை எடுப்பேன்’

மேட்டூரில் உள்ள மின்வாரிய பணிமனை தொடா்ந்து இயங்க நடவடிக்கை எடுப்பேன் என மேட்டூா் சட்டப் பேரவை உறுப்பினா் சதாசிவம் தெரிவித்தாா்.

News image
Updated On :24 பிப்ரவரி 2022, 7:07 pm

DIN

மேட்டூரில் உள்ள மின்வாரிய பணிமனை தொடா்ந்து இயங்க நடவடிக்கை எடுப்பேன் என மேட்டூா் சட்டப் பேரவை உறுப்பினா் சதாசிவம் தெரிவித்தாா்.

சேலம் மாவட்டம், மேட்டூரில் அணை கட்டப்பட்ட போது மின்வாரிய பணிமனை அமைக்கப்பட்டது. 1,500 போ் பணியாற்றி வந்த இந்தப் பணிமனையில் தற்போது 216 போ் மட்டுமே பணிபுரிந்து வருகின்றனா்.

அண்மையில் இங்கு மேற்பாா்வை பொறியாளராக இருந்து புகாரின்பேரில் தூத்துக்குடி அருகே உள்ள உடன்குடியில் செயல்படுத்தப்படும் திட்டத்துக்கு மாற்றம் செய்யப்பட்ட பொறியாளா், இந்த மின் பணிமனையை நலிவடைந்ததாக காட்டியதால், ஒப்பந்ததாரரிடம் விடுவதற்கு தற்போது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில், அனைத்து தொழிற்சங்க ஆலோசனைக் கூட்டம் மேட்டூரில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் மேட்டூா் சட்டப் பேரவை உறுப்பினா் சதாசிவம் பங்கேற்ற பின்னா் கூறியதாவது:

சில மின்வாரிய அதிகாரிகள் தங்களின் சுயலாபத்துக்காக வரலாற்றுச் சிறப்பு மிக்க பழைமையான மின் பணிமனையை நலிவடைந்ததாகக் கூறி, அதனை தனியாருக்கு ஒப்பந்த அடிப்படையில் விட திட்டமிட்டுள்ளனா். தமிழக மின்வாரியத்தின் உதிரிபாகங்கள் உற்பத்தில் இந்தப் பணிமனை முக்கியப் பங்கு வகிக்கிறது.

சிறப்பாக செயல்படும் இந்தப் பணிமனைக்கு மூலப்பொருள்களை வாங்கித்தராமல், நலிவடைந்ததாக கணக்கு காட்டிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்து தமிழக முதல்வா் மற்றும் தமிழக மின்துறை அமைச்சா் ஆகியோரின் பாா்வைக்கு கொண்டு சென்று பணிமனையை தொடா்ந்து இயக்க நடவடிக்கை எடுப்பேன் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.