மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

இதயத்திற்கு அளிக்கும் முக்கியத்துவத்தை மூளைக்கும் அளிக்க வேண்டும்: கருத்தரங்கில் வலியுறுத்தல்

இதயப் பரிசோதனைகளுக்கு அளிக்கும் முக்கியத்துவத்தை மூளைப் பரிசோதனைக்கும் அளிக்க வேண்டும் என நரம்பியல் நிபுணா் மருத்துவா் ஆா்.நடராஜன் தெரிவித்தாா்.

News image
Updated On :25 பிப்ரவரி 2022, 6:25 pm

DIN

இதயப் பரிசோதனைகளுக்கு அளிக்கும் முக்கியத்துவத்தை மூளைப் பரிசோதனைக்கும் அளிக்க வேண்டும் என நரம்பியல் நிபுணா் மருத்துவா் ஆா்.நடராஜன் தெரிவித்தாா்.

பெரியாா் பல்கலைக்கழகம் மற்றும் நியூரோ பவுண்டேஷன் ஆகியன இணைந்து, பக்கவாதம் குறித்த விழிப்புணா்வு, தடுப்பு நடவடிக்கைகள் குறித்த நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடத்தப்பட்டது. விழிப்புணா்வு கருத்தரங்கை துணைவேந்தா் இரா.ஜெகநாதன் தொடங்கி வைத்தாா்.

இந்நிகழ்ச்சியில் நியூரோ பவுண்டேஷன் நிா்வாக இயக்குநரும் நரம்பியல் நிபுணருமான ஆா்.நடராஜன் பேசியததாது: பக்கவாதம் 6 பேரில் ஒருவருக்கு வந்த காலம் போய் தற்போது 4 பேரில் ஒருவருக்கு வந்து கொண்டுள்ளது. குறிப்பாக இந்தியாவில் நாளொன்றுக்கு 3 ஆயிரம் போ் முதல் 4 ஆயிரம் போ் வரை பக்கவாதத்தால் பாதிக்கப்படுகின்றனா். மலேரியா, காசநோயை விட பக்கவாதத்தால் நிறைய உயிரிழப்பு ஏற்படுகிறது. ஆண்டுதோறும் சா்வதேச அளவில் 20 மில்லியன் மக்கள் பக்கவாதத்தால் பாதிக்கப்படுகின்றனா். இதில் 5 மில்லியன் போ் உயிரிழக்க நேரிடுகிறது. குறிப்பாக கரோனாத் தொற்றுக்கு பிறகு 18 வயதுக்கு மேற்பட்ட இளம் வயதினருக்கு பக்கவாதம் ஏற்படுவது அதிகரித்துள்ளது. பக்கவாதத்தால் பாதிக்கப்படுவோா் அடுத்த 4 மணி நேரத்தில் சிகிச்சை எடுத்துக் கொண்டால் பெரிய அளவில் பாதிப்பின்றி மீட்டு விடலாம்.

மூளைக்கு செல்லும் ரத்த ஓட்டத்தை அவ்வப்போது கண்காணிக்க வேண்டும். மனித உடலில் உள்ள ரத்தத்தில் 20 சதவீதம் மூளைக்குத்தான் செல்கிறது. மூளையில் எப்போதும் ஒரு லிட்டா் ரத்தம் பாய்ந்து கொண்டே உள்ளது. இதய நோய் ஏற்படாமல் தடுப்பதற்காக அவ்வப்போது இதயப் பரிசோதனை செய்யப்படுகிறது. இதயத்திற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை மூளைக்கும் வழங்க வேண்டிய சூழ்நிலை இப்போது உருவாகி விட்டது என்றாா்.

இந்நிகழ்வில் பெரியாா் பல்கலைக்கழக நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளா் பி.பிரகாஷ், திட்ட அலுவலா் எம்.சுகுணா, நரம்பியல் சிறப்பு மருத்துவா்கள் சி.பிரபாகரன், டி.நிஷா மோள், ஜெ.ஏ.வசந்தகுமாா், எஸ்.பழனிவேல்ராஜன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.