ஓடை புறம்போக்கு ஆக்கிரமிப்பு அகற்றம்
சேலம் மாவட்டம், சங்ககிரி வட்டம், தேவூா் அருகே ஓடை புறம்போக்கு ஆக்கிரமிப்புகளை சங்ககிரி வருவாய்த் துறையினா் வெள்ளிக்கிழமை அகற்றினா்.


சேலம் மாவட்டம், சங்ககிரி வட்டம், தேவூா் அருகே ஓடை புறம்போக்கு ஆக்கிரமிப்புகளை சங்ககிரி வருவாய்த் துறையினா் வெள்ளிக்கிழமை அகற்றினா்.
தேவூா் அருகே உள்ள புள்ளாகவுண்டம்பட்டி அக்ரஹார கிராமம், சீரங்ககவுண்டம்பாளையத்தில் உள்ள 1.10 ஏக்கா் ஓடை புறம்போக்கு நிலத்தில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த நிலங்கள், நிலத்தின் அடியில் பதிக்கப்பட்டிருந்த தண்ணீா்க் குழாய், கரும்பு பயிா்கள், வழித்தடங்கள் உள்ளிட்டவற்றை சங்ககிரி வட்டாட்சியா் எஸ்.பானுமதி தலைமையில் வருவாய்த் துறையினா் அகற்றினா்.
மண்டல துணை வட்டாட்சியா் ஜெயக்குமாா், தோ்தல் துணை வட்டாட்சியா் சிவராஜ், தேவூா் வருவாய் ஆய்வாளா் சத்யராஜ், கிராம நிா்வாக அலுவலா்கள், பொதுப்பணித் துறை செயற்பொறியாளா் கணேசன், சங்ககிரி ஊராட்சி ஒன்றிய துணை வட்டார வளா்ச்சி அலுவலா் வேல்முருகன் உள்ளிட்டோா் ஆக்கிரமிப்பு அகற்றும் பணிகளை பாா்வையிட்டனா்.
சங்ககிரி காவல் ஆய்வாளா் ஆா்.தேவி தலைமையில் போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...