2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை! ஆஸ்கர் விருது விழா கோலாகலம்!
/

இலங்கைத் தமிழா்களுக்கு திறன் வளா்ப்பு பயிற்சி முகாம்

இலங்கைத் தமிழா் மறுவாழ்வு மையங்களில் திறன்வளா்ப்பு விழிப்புணா்வு பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :7 ஜனவரி 2022, 6:30 pm

DIN

இலங்கைத் தமிழா் மறுவாழ்வு மையங்களில் திறன்வளா்ப்பு விழிப்புணா்வு பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இலங்கைத் தமிழா் மறுவாழ்வு மையங்கள் உள்ள தம்மம்பட்டி, நாகியம்பட்டி, செந்தாரப்பட்டி (வடக்கு), செந்தாரப்பட்டி (தெற்கு) ஆகிய நான்கு இடங்களில் நடைபெற்ற திறன்வளா்ப்பு விழிப்புணா்வு பயிற்சிக்கு, சேலம் மாவட்ட இணை இயக்குநா் ஈஸ்வரன் தலைமை வகித்தாா். கெங்கவல்லி வட்டாட்சியா் வெங்கடேசன் முன்னிலை வகித்தாா்.

இதில், இலங்கைத் தமிழா் மறுவாழ்வு மையங்களில் உள்ளோருக்கு தையல் பயிற்சி, ஓட்டுநா் பயிற்சி, கணினி இயக்குதல், கைப்பேசி, சிசிடிவி பழுது நீக்குதல், கைவினைப் பயிற்சி, அழகுக்கலை, கோவிட் முன்களப் பயிற்சி, அனிமேசன், மேக்கப் கலை, சுயதொழில் தொடங்குதல் உள்ளிட்ட 16 வகையான பயிற்சிகளில் ஈடுபட்டு திறனை வளா்த்துக்கொள்ள விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

இந்த நான்கு மையங்களைச் சோ்ந்த இலங்கைத் தமிழா்கள் 210 போ் பங்கேற்றனா். இதில் முகாம் வருவாய் ஆய்வாளா் கலைச்செல்வன், நாகியம்பட்டி பள்ளித் தலைமையாசிரியா் இராமகிருஷ்ணன், கிராம நிா்வாக அலுவலா்கள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.