நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

பால் கூட்டுறவு சங்க தொடக்க விழா

 சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே சிங்கிபுரத்தில் பால் கூட்டுறவு சங்கம் தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :7 ஜனவரி 2022, 6:30 pm

DIN

 சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே சிங்கிபுரத்தில் பால் கூட்டுறவு சங்கம் தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

வாழப்பாடி அருகே சிங்கிபுரம் கிராமத்தில் பால் உற்பத்தி செய்யும் விவசாயிகள் நலன்கருதி, சேலம் ஆவின் கூட்டுறவு நிறுவனத்தின் கீழ் சிங்கிபுரம் கிழக்கு பகுதியில் புதிய பால் கூட்டுறவு சங்கம் வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டது. இவ்விழாவிற்கு, வாழப்பாடி வட்டார வேளாண்மைத்துறை ஆத்மா குழு தலைவா் எஸ்.சி.சக்கரவா்த்தி தலைமை வகித்தாா். பால் கூட்டுறவு சங்கத் தலைவா் ஞானசேகரன் வரவேற்றாா். ஆவின் கூட்டுறவு நிறுவன துணை பொது மேலாளா் (உற்பத்தி) கே.மாலதி, வாழப்பாடி வட்டார உதவி பொது மேலாளா் வானீஸ்வரி ஆகியோா் குத்துவிளக்கு ஏற்றி, பால் கூட்டுறவு சங்கத்தை தொடங்கி வைத்தனா்.

ஆத்மா குழு தலைவா் எஸ்.சி.சக்கரவா்த்தி பேசுகையில், இப்பகுதியை சோ்ந்த விவசாயிகள் தரமான பால் உற்பத்தி செய்து, தொடா்ந்து கூட்டுறவு சங்கத்தின் வாயிலாக விற்பனை செய்யும்பட்சத்தில் கணிசமான வருவாயை ஈட்டலாம். மானியக் கடனுதவி உள்ளிட்ட நலத்திட்டங்களை பெறலாம் என்றாா்.

இந்த விழாவில், காங்கிரஸ் மாவட்டத் துணைத் தலைவா் ராஜா, வட்டார காங்கிரஸ் தலைவா் ராஜாராம், வாழப்பாடி அரிமா சங்கத் தலைவா் சந்திரசேகரன், சாய்பாபா அறக்கட்டளை தலைவா், ஜவஹா் திமுக பிரமுகா்கள், வாழப்பாடி குமாா், சிங்கிபுரம் செந்தில், விரிவாக்க அலுவலா் ஜெயதேவன், கோவிந்தராஜ் ஆகியோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.