முழு பொது முடக்கம்: தேவையின்றி வரும் வாகனங்களை தடுத்து நிறுத்தி அபராதம் விதிப்பு
கரோனா பரவலை தடுக்கும் வகையில் ஞாயிற்றுக்கிழமை முழு பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.


ஒமைக்ரான் கரோனா தொற்றை தடுக்கும் விதமாக தமிழக அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.
மேலும் ஜனவரி 6ஆம் தேதி முதல் இரவு நேர முடக்கம் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு பொது முடக்கம் அமல்படுத்த தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது.
அதன்படி, தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை முழு பொது முடக்கம் உத்தரவு அமல்படுத்தியுள்ளது.

இந்நிலையில், சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் ஐந்து சாலை, புதிய பேருந்து நிலையம், ஜங்சன் ஏற்காடு பிரதான சாலை உள்ளிட்ட நகரின் பல்வேறு பகுதிகளில் முழு பொது முடக்க உத்தரவு காரணமாக சாலைகளில் ஆள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டன.
இதையும் படிக்க | அமலுக்கு வந்தது முழு ஊரடங்கு: எதற்கெல்லாம் அனுமதி?
மாநகரின் முக்கிய சந்திப்புகளில் தடுப்புகள் அமைக்கப்பட்டு காவலர்கள் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். தேவையின்றி வரும் வாகனங்களை தடுத்து நிறுத்தி அவர்களுக்கு அபராதம் விதித்து வருகின்றனர்.
மேம்பாலங்கள் முழுவதும் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது.

உழவர் சந்தைகள் வழக்கம் போல் இயங்கின. இருந்தபோதிலும் மக்கள் எவரும் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது.
சேலம் மாநகரில் 800 காவலர்களும், மாவட்டத்தில் 1,200 காவலர்கள் என இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...