வாழப்பாடி அருகே நாட்டுத் துப்பாக்கியுடன் விவசாயி கைது
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே நாட்டுத்துப்பாக்கி பதுக்கி வைத்திருந்த விவசாயியை வாழப்பாடி போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். உரிமம் இல்லாத நாட்டுத் துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது.


சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே நாட்டுத்துப்பாக்கி பதுக்கி வைத்திருந்த விவசாயியை வாழப்பாடி போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். உரிமம் இல்லாத நாட்டுத் துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது.
வாழப்பாடி அருகே புழுதிக்குட்டை ஊராட்சிக்கு உட்பட்ட பெரியகுட்டிமடுவு பகுதியைச் சோ்ந்தவா் விவசாயி லட்சுமணன்(55). இவா், சின்னம்மநாயக்கன்பாளையத்தில் பம்பைக்காரா் என்பவரது தோட்டத்தில் விவசாய நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வருகிறாா். இந்நிலையில், சனிக்கிழமை உதவி காவல் ஆய்வாளா் சம்பத் தலைமையிலான வாழப்பாடி போலீஸாா்,ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, விவசாயி லட்சுமணன், உரிமம் இல்லாத நாட்டு துப்பாக்கியுடன் சுற்றித் திரிவதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து வாழப்பாடி போலீஸாா் சின்னமநாயக்கன்பாளையத்தில் லட்சுமணன் வீட்டை சோதனை செய்ததில், வீட்டில் உரிமம் இல்லாத நாட்டுத் துப்பாக்கி பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. நாட்டு துப்பாக்கியை பறிமுதல் செய்த வாழப்பாடி போலீசாா் லட்சுமணனைக் கைது செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...