ஏற்காட்டில் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பு
சேலம் மாவட்டம், ஏற்காட்டில் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.


சேலம் மாவட்டம், ஏற்காட்டில் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.
ஏற்காட்டுக்கு பொங்கல் பண்டிகை, மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல் என தொடா் விடுமுறையை முன்னிட்டு சனிக்கிழமை ஏராளமான சுற்றுலாப் பயணிகள் காா்கள், இருசக்கர வாகனங்கள், வேன்களில் வரத்துவங்கினா். மலைப்பாதையில் சுற்றுலாப் பயணிகளின்கூட்ட நெரிசல் காண முடிந்தது. ஏற்காடு சுற்றலாப் பகுதியான படகு இல்லம், ஏரி பூங்கா, அண்ணா பூங்கா, கிளியூா் நீா் அருவி பகுதி, கரடியூா் வனக்காட்சி பகுதி, சோ்வராயன் கோவில், பக்கோடா காட்சி முனை, ரோஜா தோட்டம், தாவரவியல் பூங்கா, ஐந்திணைப் பூங்கா, ஏரி அருகில் உள்ள மான்பூங்காவில் ஏராளமான சுற்றுளாப்பயணிகள் இயற்கை அழகை கண்டு மகிழ்ந்தனா். சுற்றுலாப் பகுதி சாலைகள் வாகன நெரிசலுடன் காணப்பட்டன. அண்ணா பூங்கா சாலை ரோஜா தோட்டம் பகுதிகளில் சாலையோர கடைகளில் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் காணப்பட்டது .
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...