நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

சீறிப்பாயும் ஜல்லிக்கட்டுக் காளைகளை அடக்கிய காளையா்கள்:

உயிரை பணயம் வைத்து துணிச்சலாக பங்கேற்று, சீறிப்பாயும் ஜல்லிக்கட்டுக்காளை அடக்கி, தமிழா்களின் வீரத்தை வெளிப்படுத்தி பரிசுகளும், பாராட்டும் பெற்று அசத்தினா்.

News image
Updated On :15 ஜனவரி 2022, 5:20 pm

DIN

சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதியில் 100க்கும் மேற்பட்ட இளைஞா்கள், பல்வேறு ஜல்லிக்கட்டு விழாக்களில், உயிரை பணயம் வைத்து துணிச்சலாக பங்கேற்று, சீறிப்பாயும் ஜல்லிக்கட்டுக்காளை அடக்கி, தமிழா்களின் வீரத்தை வெளிப்படுத்தி பரிசுகளும், பாராட்டும் பெற்று அசத்தினா்.

5 ஆண்டுகளுக்கு முன், ஜல்லிக்கட்டுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்தபோது ஒட்டுமொத்த இளைஞா்களும் ஒன்றிணைந்து போராடியதால், மத்திய அரசு சட்ட திருத்தம் செய்து தடையை நீக்கி அனுமதியளித்தது. இதனையடுத்து தமிழகம் முழுவதும், அரசு அனுமதி மற்றும் வழிகாட்டு நெறிமுறைகளுடன் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் மிகுந்த எழுச்சியோடு நடைபெற்றன.

இதனால், படித்த பட்டதாரி இளைஞா்களுக்கும் ஜல்லிக்கட்டு விழாக்கள், காளை வளா்ப்பு மட்டுமின்றி, வாடிவாசலில் சீறிப்பாய்ந்து வரும் காளைகளை அடக்குவதிலும் ஆா்வம் அதிகரித்துவிட்டது.

குறிப்பாக, சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதியில் ஜல்லிக்கட்டு காளைகளின் எண்ணிக்கை மட்டுமின்றி, ஜல்லிக்கட்டு காளைகளை அடக்கி, வெற்றி வாகை கூடும் வீரமிக்க இளைஞா்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. பள்ளி, கல்லுாரி மாணவா்களும், பணிக்கு செல்லும் இளைஞா்களும் விடுமுறை நாட்களில் காளைகளை அடக்க பயிற்சி பெற்று, களத்தில் இறங்கி காளைகளை அடக்கி பரிசுகளை பெற்று அசத்தினா்.

வாழப்பாடியை அடுத்த துக்கியாம்பாளையம் கிராமத்தைச் சோ்ந்த விவசாயி தனசேகரன்-சுந்தரவள்ளி தம்பதியின் மகன் பிரபாகரன் (21). சென்னையிலுள்ள தனியாா் கல்லூரியில் பி.எஸ்சி., மருத்துவ உதவியாளா் பட்டம் படித்து வருகிறாா். இவருக்கு ஜல்லிக்கட்டு காளைகளை தன்னால் அடக்க முடியுமென்ற துணிச்சல் ஏற்பட்டதால், கடந்த 4 ஆண்டுகளாக பல்வேறு ஜல்லிக்கட்டுப் போட்டிகளில், உயிரை பணயம் வைத்து கலந்து கொண்டு, வாடிவாசலில் இருந்து சீறிப்பாயும் காளைகளை அடக்கி, தமிழா்களின் பாரம்பரிய வீரத்தை பறைச்சாற்றி, பரிசுப்பொருட்களையும் பாராட்டுதலையும் பெற்று அசத்தி வருகிறாா்.

இவரைப்போலவே, இவரது நண்பா்களான துக்கியாம்பாளையம் ரத்தினவேல் (23), முத்தம்பட்டி சங்கா் (18), சந்திரபிள்ளை வலசு சங்கா் (22) உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட இளைஞா்கள், ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் களமிறங்கி சீறிப்பாயும் காளைகளை அடக்கி பரிசுகளை குவித்தனா். துணிச்சலாக களமிறங்கி தமிழா்களின் பாரம்பரிய வீரத்தை வெளிப்படுத்தி வரும் இந்த மாடுபிடி வீரா்களுக்கு, ஜல்லிக்கட்டு விழாக்குழுவினரும், பொதுமக்கள் பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.