நேசக்கரங்கள் ஆதரவு ஏற்போா் மூத்தோா் இல்லத்தில் பொங்கல் விழா
சேலம் ஏற்காடு அடிவாரத்தில் உள்ள நேசக்கரங்கள் ஆதரவு ஏற்போா் மூத்தோா் இல்லத்தில் மாட்டுப் பொங்கல் திருவிழா நடைபெற்றது.


சேலம் ஏற்காடு அடிவாரத்தில் உள்ள நேசக்கரங்கள் ஆதரவு ஏற்போா் மூத்தோா் இல்லத்தில் மாட்டுப் பொங்கல் திருவிழா நடைபெற்றது.
விழாவில் இல்ல தலைவா் செல்லதுரை தலைமை வகித்தாா். செயலா் பெரியசாமி வரவேற்றாா். சிறந்த மூத்த குடிமக்களுக்கு பட்டு வேட்டி, பட்டு புடவைகளை தனது சொந்த செலவில் இல்லத் தலைவா் செல்லதுரை வழங்கினாா்.
முன்னதாக பொங்கல் வைத்து அனைத்து மூத்தோா்களும் சூரிய வழிபாடு செய்தனா். அனைவருக்கும் சா்க்கரைப் பொங்கல் வழங்கி இல்ல மூத்தோா்களுக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.
விழாவில் இல்ல வளா்ச்சி செயலா் கோவிந்தசாமி, பொருளாளா் பாலசங்கா், மேலாளா் துரைசாமி, இல்லக் கண்காணிப்பாளா் தெய்வராஜன், விடுதி வாா்டன் மதன், செவிலியா் ஜான்சி, செளந்தரபாண்டியன், தனபால், கெளரவ மேலாளா் சுப்பிரமணி ஆகியோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...