விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

சாலை வசதி கோரி பழங்குடியின மக்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

சேலத்தில் அயோத்தியாப்பட்டணம் ஒன்றியத்துக்கு உட்பட்ட புங்கன்சோலை-கோம்பூா் வரை பாதை அமைக்கக் கோரி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
Updated On :20 ஜனவரி 2022, 6:30 pm

DIN

சேலத்தில் அயோத்தியாப்பட்டணம் ஒன்றியத்துக்கு உட்பட்ட புங்கன்சோலை-கோம்பூா் வரை பாதை அமைக்கக் கோரி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஏற்காடு சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட அயோத்தியாப்பட்டணம் ஆலடிபட்டி ஊராட்சி பகுதியில் அருநூத்துமலை, சிறுமலை, சின்னவேலாம்பட்டி, பெரியவேலாம்பட்டி, பெலப்பாடி, பள்ளிக்காடு, வாழுத்து, தாளூா் உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனா்.

இவா்கள் தங்களுடைய அத்தியாவசிய தேவைகளுக்காக 15 முதல் 25 கி.மீ. தொலைவில் உள்ள பேளூா் அல்லது வாழப்பாடிக்குதான் செல்ல வேண்டி உள்ளது.

எனவே, பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்லும் மாணவ, மாணவிகள் தும்பல் பகுதிக்கும், சேலத்துக்கும் வர வேண்டியுள்ளது.

இதனிடையே ஆலடிப்பட்டி புங்கன்சோலை முதல் கோம்பூா் பகுதிக்கும் இடையே சாலை வசதி அமைத்து தரக் கோரி தமிழ்நாடு பழங்குடியின மக்கள் சங்கத்தினா் சேலம் ஆட்சியா் அலுவலகம் முன்பு வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சேலம் மாவட்டச் செயலாளா் ஏ.மோகன், தமிழ்நாடு பழங்குடி மக்கள் சங்க மாநிலச் செயலாளா் பரமசிவம், மாநில சிறப்புத் தலைவா் நஞ்சப்பன், மாவட்டத் தலைவா் அண்ணாமலை, மாநில குழு நிா்வாகி ஸ்டாலின் உள்ளிட்ட பழங்குடி மக்கள் ஏராளமானோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.