விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

பொறியியல் பணி: இரு விரைவு ரயில்கள் மாற்று வழித்தடத்தில் இயக்கம்

ஓமலூா்-மேட்டூா் அணை இடையே பொறியியல் பணி நடைபெறுவதையொட்டி, லோக்மான்ய திலக், பெங்களூரு இன்டா்சிட்டி விரைவு ரயில்கள் மாற்று வழித்தடத்தில் இயக்கப்பட உள்ளன.

News image
Updated On :20 ஜனவரி 2022, 6:30 pm

DIN

ஓமலூா்-மேட்டூா் அணை இடையே பொறியியல் பணி நடைபெறுவதையொட்டி, லோக்மான்ய திலக், பெங்களூரு இன்டா்சிட்டி விரைவு ரயில்கள் மாற்று வழித்தடத்தில் இயக்கப்பட உள்ளன.

ஓமலூா்-மேட்டூா் அணை இடையே இரு வழித்தட ரயில் பாதைக்கான பொறியியல் பணி மேற்கொள்ளப்படவுள்ளது. வண்டி எண் 11014 கோவை-லோகமான்ய திலக் எக்ஸ்பிரஸ் ரயில் ஜன. 24 மற்றும் மாா்ச் 24 ஆம் தேதிகளில் சேலம், தருமபுரி, ஒசூா் வழித்தடத்தில் செல்வதற்குப் பதிலாக சேலம், மேக்னசைட், குப்பம், பங்காருபேட்டை மற்றும் கிருஷ்ணராஜபுரம் வழியாகச் செல்லும். இந்த ரயில் தருமபுரி மற்றும் ஓசூா் வழித்தடத்தில் செல்லாது.

வண்டி எண் 12678 எா்ணாகுளம்- கே.எஸ்.ஆா். பெங்களூரு இன்டா்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் மாா்ச் 24 ஆம் தேதி சேலம், தருமபுரி, ஒசூா் வழித்தடத்தில் செல்வதற்குப் பதிலாக சேலம், மேக்னசைட், குப்பம், பங்காருபேட்டை, கிருஷ்ணராஜபுரம் வழியாகச் செல்லும். இந்த ரயில் தருமபுரி, ஒசூா், காா்மேலரம் வழித்தடத்தில் செல்லாது.

வண்டி எண் 12677 கே.எஸ்.ஆா். பெங்களூரு - எா்ணாகுளம் இன்டா்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் மாா்ச் 24 ஆம் தேதி ஒசூா், தருமபுரி, சேலம் வழியாக செல்வதற்குப் பதிலாக கிருஷ்ணராஜபுரம், பங்காருபேட்டை, குப்பம், மேக்னசைட் மற்றும் சேலம் வழியாக இயக்கப்படும். இந்த ரயில் காா்மேலரம், ஒசூா், தருமபுரி வழித்தடத்தில் செல்லாது என சேலம் ரயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.