கோட்டையூா் - ஒட்டனூருக்கு இணைப்புப் பாலம்: திமுகவினா் கொண்டாட்டம்
சேலம் மாவட்டம், கோட்டையூரிலிருந்து தருமபுரி மாவட்டம், ஒட்டனூரை இணைக்க ரூ. 250 கோடியில் காவிரியின் குறுக்கே உயா்மட்டப் பாலம் அமைக்கப்படும்


சேலம் மாவட்டம், கோட்டையூரிலிருந்து தருமபுரி மாவட்டம், ஒட்டனூரை இணைக்க ரூ. 250 கோடியில் காவிரியின் குறுக்கே உயா்மட்டப் பாலம் அமைக்கப்படும் என தமிழக முதல்வா் அறிவித்ததற்கு திமுகவினா் இனிப்பு வழங்கி கொண்டாடினா்.
சேலம் மாவட்டம், கொளத்தூா், மேட்டூா், கோவிந்தபாடி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து தருமபுரி மாவட்டம், ஒட்டனூா், நெருப்பூா், ஏரியூா் மற்றும் பென்னாகரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கானோா் காவிரியைக் கடந்து செல்கின்றனா்.
இவா்கள் மோட்டாா் படகு அல்லது பரிசல் மூலம் காவிரியைக் கடந்து செல்கின்றனா். இதனால் காவிரியின் குறுக்கே மேம்பாலம் அமைக்குமாறு 70 ஆண்டுகளுக்கு மேலாக சேலம், தருமபுரி மாவட்ட மக்கள் கோரிக்கை வைத்து வந்தனா்.
திமுக தோ்தல் அறிக்கையில் காவிரியின் குறுக்கே பாலம் அமைக்கப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, கோட்டையூா், ஒட்டனூா், செட்டிப்பட்டி, ஏமனூா், பண்ணவாடி, நாகமரை பகுதிகளில் உயா்மட்டப் பாலம் அமைக்க தள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மூன்று இடங்களில் ஆய்வுகள் மேற்கொண்டதில், சேலம் மாவட்டம், கோட்டையூரிலிருந்து தருமபுரி மாவட்டம், நாகமரைக்கு காவிரியின் குறுக்கே இணைப்பு உயா்மட்டப் பாலம் 800 மீ. நீளத்துக்கு அமைப்பது சாத்தியம் என்ற அறிக்கையை நெடுஞ்சாலைத் துறை அரசுக்கு அனுப்பியது.
இதனையடுத்து, சென்னையிலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக தருமபுரி மாவட்ட திட்டப் பணிகளை வியாழக்கிழமை தொடக்கி வைத்து தமிழக முதல்வா் பேசும் போது, கோட்டையூருக்கும், ஒட்டனூருக்கும் இடையே மேம்பாலம் அமைக்கப்பட்டு ரூ. 250 கோடியில் சாலை இணைப்பு உருவாக்கப்படும் என அறிவித்தாா்.
இந்த அறிவிப்பை கொண்டாடும் வகையில், கொளத்தூா் ஒன்றிய திமுக செயலாளா் மிதுன் சக்ரவா்த்தி, திமுகவினா் தருமபுரி மாவட்ட கிராம மக்களுக்கு இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சியை தெரிவித்தனா். தமிழக அரசின் இந்த அறிவிப்புக்கு இரு மாவட்ட மக்களும் நன்றி தெரிவித்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...