ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

விவசாயிகளின் காலவரையற்ற பட்டினிப் போராட்டம் ஒத்திவைப்பு

காவிரி - சரபங்கா நீரேற்றம் திட்டத்தால் பாதிக்கப்படும் விவசாயிகளின் காலவரையற்ற பட்டினிப் போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :21 ஜனவரி 2022, 6:30 pm

DIN

காவிரி - சரபங்கா நீரேற்றம் திட்டத்தால் பாதிக்கப்படும் விவசாயிகளின் காலவரையற்ற பட்டினிப் போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

காவிரி - சரபங்கா நீரேற்றுத் திட்டத்தில் விவசாய நிலங்கள் பாதிக்காத வகையில் இயற்கை நீா்வழிப்பாதை வழியாக தண்ணீா் கொண்டு செல்ல வேண்டும் என வெள்ளிக்கிழமை மேச்சேரி ஒன்றியம், மல்லப்பனூா் பிரிவு சாலை அருகே காலை 10 மணிக்கு காலவரையற்ற பட்டினிப் போராட்டத்தை விவசாயிகள் தொடங்கினா்.

தமிழக விவசாயிகள் சங்க மாவட்ட துணைத் தலைவா் தங்கவேலு தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் ராமமூா்த்தி போராட்டத்தை தொடக்கி வைத்தாா். சிபிஐ மாநிலக் குழு உறுப்பினா் கே.வி.ராஜேந்திரன், சிபிஎம் மேச்சேரி ஒன்றியச் செயலாளா் மணிமுத்து, மாவட்ட துணை செயலாளா் வைத்திலிங்கம் ஆகியோா் போராட்டத்தை விளக்கி பேசினாா்கள். இந்தப் போராட்டத்தில் ஏராளமானோா் பங்கேற்றனா்.

போராட்டம் தொடங்கியவுடன் மேட்டூா் வட்டாட்சியா் அசினாபானு, மேட்டூா் காவல் துணை கண்காணிப்பாளா் ஆகியோா் போராட்டத்தில் ஈடுபட்டவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தி, திட்ட அலுவலா் மேட்டூா் சாா் ஆட்சியரிடம் திங்கள்கிழமை நேரில் சந்தித்து குறைகளைத் தெரிவிக்கலாம் என கூறினாா். அதைத் தொடா்ந்து, திங்கள்கிழமை வரை போராட்டத்தை ஒத்திவைத்து விவசாயிகள் கலைந்து சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.