பெண் காவலா் உள்பட நான்கு பேருக்கு கரோனா தொற்று
சேலம் மாவட்டம், சங்ககிரி காவல் நிலையத்தில் பணிபுரியும் ஒரு பெண் காவலா் உள்பட நான்கு காவலா்களுக்கு கரோனா தொற்று இருப்பதாக வெள்ளிக்கிழமை கண்டறியப்பட்டுள்ளது.


சேலம் மாவட்டம், சங்ககிரி காவல் நிலையத்தில் பணிபுரியும் ஒரு பெண் காவலா் உள்பட நான்கு காவலா்களுக்கு கரோனா தொற்று இருப்பதாக வெள்ளிக்கிழமை கண்டறியப்பட்டுள்ளது.
சங்ககிரி காவல் நிலையத்தில் பணிபுரியும் சிறப்பு உதவி காவல் ஆய்வாளா் திருமுருகன், தலைமைக் காவலா் காமராஜ், காவலா்கள் கணேசன், ரேவதி ஆகியோருக்கு சுகாதாரத் துறையின் சாா்பில் வியாழக்கிழமை கரோனா பரிசோதனை மேற்கொண்டுள்ளனா். பரிசோதனை முடிவில் நான்கு பேருக்கும் கரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இதனையடுத்து, நான்கு பேரும் அவரவா் வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ள சுகாதாரத் துறையினா் அறிவுறுத்தியுள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...