டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

வாழப்பாடியில் தேவாலய வணிக கட்டடத்தில் இயேசு சிலை:  பாஜக எதிர்ப்பால் திரையிட்டு மறைப்பு

வாழப்பாடி பத்தாம் பத்திநாதர் தேவாலய வணிக கட்டத்தின் மீது சனிக்கிழமை நிறுவப்பட்ட 8 உயர இயேசுவின் திருவுருவச்சிலை, பாஜக., எதிர்ப்பால் திரையிட்டு மூடி மறைக்கப்பட்டது. 

News image
திரைச்சேலையைக் கொண்டு மூடி மறைக்கப்பட்ட பத்தாம்பத்திநாதர் தேவாலயத்தில் நிறுவப்பட்ட இயேசு சிலை.
Updated On :22 ஜனவரி 2022, 1:57 pm

DIN

வாழப்பாடி பத்தாம் பத்திநாதர் தேவாலய வணிக கட்டத்தின் மீது சனிக்கிழமை நிறுவப்பட்ட 8 உயர இயேசுவின் திருவுருவச்சிலை, பாஜக., எதிர்ப்பால் திரையிட்டு மூடி மறைக்கப்பட்டது. 

சேலம் மாவட்டம், வாழப்பாடி பேருந்து நிலையம் அருகே கடலுார் பிரதான சாலையில், கத்தோலிக்க கிறித்துவர்களின் பத்தாம்பத்திநாதர் மற்றும் புனித அந்தோனியார் தேவாலயம் அமைந்துள்ளது. இந்த தேவாலய வளாகத்திலுள்ள மூன்றடுக்கு வணிக கட்டத்தை புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இதற்கிடையே, தரையில் இருந்து மூன்றாவது மாடியில் மேல் 8 அடி உயர இயேசுவின் முழு உருவ பைபர் சிலை சனிக்கிழமை நிறுவப்பட்டது.

இச்சிலை அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ளதாகக் கூறி, அகற்ற வேண்டுமென கோரிக்கை விடுத்து, சேலம் கிழக்கு மாவட்ட பாஜக தலைவர் வழக்குரைஞர் க.மணிகண்டன் தலைமையில், நிர்வாகிகள், பொன்.பழனிசாமி, குணசேகரன், வெங்கடாஜலம், ஜேகே, பழனிவேல்,ஹரிஜெயசித்ரா உள்ளிட்டோர் தேவாலயத்திற்கு முன் கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது. 

Story image

இதுகுறித்து தகவலறிந்த வாழப்பாடி காவல் ஆய்வாளர் உமாசங்கர், வருவாய் ஆய்வாளர் கார்த்திக், கிராம நிர்வாக அலுவலர் சக்திவேல் உள்ளிட்ட அதிகாரிகள், தேவாலய நிர்வாகிகள் மற்றும் பாஜக–வினருடன் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனையடுத்து, தேவாலய வணிக கட்டத்தின் மேல் நிறுவப்பட்ட இயேசுவின் திருவுருவச்சிலை, திரைச்சேலைக் கொண்டு மூடி மறைக்கப்பட்டது. 

முறையான அனுமதி பெற்ற பிறகு தேவாலய நிர்வாகம் சிலையை திறக்க முடிவு செய்யப்பட்டது.  பிரச்னைக்கு சுமூகத்தீர்வு ஏற்பட்டதால் இரு தரப்பினரும் கலைந்து சென்றனர்.

இதுகுறித்து கத்தோலிக்க கிறித்துவ பங்கு மக்கள் கூறுகையில், தேவாலயத்திற்கு சொந்தமான  வணிக கட்டடத்தில், ஏற்கனவே இயேசுவின் சிமெண்ட் சிலை வைக்கப்பட்டிருந்தது. இச்சிலை அப்புறப்படுத்தப்பட்டதால், அதற்கு மாற்றாக தற்போது புதிய பைபர் சிலை நிறுவப்பட்டுள்ளது. என்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.