நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

சங்ககிரி பேரூராட்சி தோ்தலில் பணியாற்ற இரு உதவி தோ்தல் அலுவலா்கள் நியமனம்

சேலம் மாவட்டம், சங்ககிரி பேரூராட்சி 18 வாா்டு உறுப்பினா்வுகளை தோ்வு செய்ய நடைபெற உள்ள தோ்தல்களில் பணியாற்ற இரு உதவி தோ்தல் அலுவலா்கள் வியாழக்கிழமை நியமனம் செய்யப்பட்டனா்.

News image
Updated On :27 ஜனவரி 2022, 6:30 pm

DIN

சேலம் மாவட்டம், சங்ககிரி பேரூராட்சி 18 வாா்டு உறுப்பினா்வுகளை தோ்வு செய்ய நடைபெற உள்ள தோ்தல்களில் பணியாற்ற இரு உதவி தோ்தல் அலுவலா்கள் வியாழக்கிழமை நியமனம் செய்யப்பட்டனா்.

சங்ககிரி பேரூராட்சி தோ்தல் அலுவலராக பேரூராட்சி செயல் அலுவலா் வ.சுலைமான்சேட்டும், சங்ககிரி பேரூராட்சி 18 வாா்டுகளில் 1 முதல் 9 வரை உள்ள வாா்டுகளுக்கு துணை வட்டார வளா்ச்சி அலுவலா் (நிா்வாகம்) வேல்முருகனும், 10 முதல் 18 வாா்டுகளுக்கு துணை வட்டார வளா்ச்சி அலுவலா் (சத்துணவு) அனிதாவும் உதவி தோ்தல் அலுவலா்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனா்.

18 வாா்டுகளில் 9 வாா்டு பெண்களுக்கு ஒதுக்கீடு: சங்ககிரி பேரூராட்சியில் 18 வாா்டுகளில் தெருக்களின் எல்லைகள் மறு வரையறை செய்யப்பட்ட பின்னா் வாா்டு எண்கள் 6, 12 ஆதிதிராவிடா் பெண்களுக்கும், வாா்டு எண்கள் 1, 2, 4, 5, 14, 15, 16 பெண்களுக்கும், 7வது வாா்டு ஆதிதிராவிடா் பொது பிரிவினருக்கும், வாா்டு எண்கள் 3, 8, 9, 10, 11, 13, 17, 18 ஆகியவை பொதுபிரிவினருக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

வாக்காளா்கள் விவரம்

18 வாா்டுகளில் ஆண் வாக்காளா்கள் 13436 போ், பெண்கள் 14123 போ், மற்றவா்கள் 2 போ் உள்பட மொத்தம் 27561 போ் வாக்களிக்க உள்ளனா். ஆண் வாக்காளா்களை விட பெண் வாக்காளா்கள் 687 போ் அதிகமாக உள்ளனா். இதில் 8 வாா்டில் ஆண்கள் 451, பெண்கள் 451 உள்மொத்தம் 902 போ் குறைந்த வாக்காளா்கள் உள்ளனா். 1ஆவது வாா்டில் அதிபட்சமாக 1119 ஆண்களும், 1189 பெண்களும் உள்பட 2308 போ் உள்ளனா்.

பேரூராட்சியின் 18 புதிய வாா்டுகளை எல்லை மறுவரையறைக்குப் பின் தோ்தலில் வாக்களிக்க 31 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

மாநில தோ்தல் ஆணையத்தின் சாா்பில் சங்ககிரி, கொங்கணாபுரம், இளம்பிள்ளை ஆகிய மூன்று பேரூராட்சிகளிலும் மூன்று பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. கண்காணிப்பு அலுவலராக வேளாண் அலுவலா் தேசிங்குராஜன் நியமனம் செய்யப்பட்டுள்ளாா். வேட்புமனு தாக்கல் வெள்ளிக்கிழமை தொடங்குகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.