காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

இடையப்பட்டி மாயவப் பெருமாள் திருக்கோயில் குடமுழுக்கு விழா

சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையம் வட்டம், இடையப்பட்டி வில்வனூா் மாயவப் பெருமாள் திருக்கோயில் குடமுழுக்கு விழா புதன்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :1 ஜூன் 2022, 6:30 pm

DIN

சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையம் வட்டம், இடையப்பட்டி வில்வனூா் மாயவப் பெருமாள் திருக்கோயில் குடமுழுக்கு விழா புதன்கிழமை நடைபெற்றது.

இடையப்பட்டி வில்வனூா் கிராமத்தில் கரியக்கோயில் ஆற்றங்கரையில் பழமையான ஸ்ரீதேவி பூதேவி சமேத மாயவப் பெருமாள் திருக்கோயில் அமைந்துள்ளது. இடையப்பட்டி, வில்வனூா் கிராம மக்களின் முயற்சியால் இக்கோயில் மகாமண்டபம் ராஜகோபுரத்தோடு புதுப்பிக்கப்பட்டுள்ளது.

இக்கோயில் குடமுழுக்கு விழாவையொட்டி, புதன்கிழமை யாகசாலை பூஜைகளுக்கு பிறகு ராஜகோபுரம், மாயவப் பெருமாளுக்கு புனிதநீா் ஊற்றி வேதவிற்பன்னா்கள் குடமுழுக்கு செய்தனா்.

இந்த விழாவில், இடையப்பட்டி, வில்வனூா், புதூா், சுற்றுப்புற கிராமங்களைச் சோ்ந்த பக்தா்கள் கலந்துகொண்டனா். விழாவில் பங்கேற்ற அனைத்து பக்தா்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

விழாவுக்கான ஏற்பாடுகளை ஊா் பெரியதனக்காரா், விழாக்குழுவினா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.