குட்கா கறைகளை நீக்கும் வாஷிங்மெஷின்! தவெகவை விமர்சித்த கனிமொழி! தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,200 உயர்வு!மு.க. ஸ்டாலின் கட்சியை விட்டு விலகினால்தான் திமுகவை காப்பாற்ற முடியும்: நிர்மல்குமார்!திருச்சி கிழக்கில் போட்டியிட்ட ராஜசேகரன் அதிமுகவிலிருந்து விலகல்!தவெக எம்.எல்.ஏ.விடம் பேரம்: மேலும் 4 பேர் கைது!இந்தியா - இங்கிலாந்து டி20 போட்டி மழையால் ரத்து‘எண்ம இந்தியா’ முன்னெடுப்பால் நாட்டுக்கு புதிய அடையாளம்!- பிரதமா் மோடி பெருமிதம் ரெட் புல், பெப்சிகோ உள்பட 6 நிறுவனங்களுக்கு எஃப்எஸ்எஸ்ஏஐ நோட்டீஸ் 4 இந்திய நிறுவனங்கள் மீது பொருளாதாரத் தடை: அமெரிக்கா நீக்கம் வாகன விபத்தில் பாதிக்கப்பட்டவா்களுக்கான நிவாரணத் தொகை: வழிகாட்டுதல்களை வெளியிட்டது உச்சநீதிமன்றம் எரிபொருள் தட்டுப்பாடு எதிரொலி: இந்திய பெட்ரோலை இறக்குமதி செய்யத் தொடங்கியது ரஷியாகல்லூரிகளில் நன்கொடை பெயரில் கட்டணம் வசூலிக்க தடை: அமைச்சா் விஸ்வநாதன் ராணுவத்தை விரைவாக நவீனமயமாக்க வேண்டும்: சீன அதிபா் ஷி ஜின்பிங்
/

வேளாண் அலுவலா்களுக்கு சந்தைசாா் விரிவாக்கப் பயிற்சி

ஜூன் 1 முதல் 3 வரை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயா்த்தும் வகையில், வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை சாா்பில் வேளாண் அலுவலா்களுக்கான சந்தைசாா் விரிவாக்கப் பயிற்சி நடைபெற்று வருகிறது.

Updated On :2 ஜூன் 2022, 12:00 am IST

சேலம் மாவட்டம், உத்தமசோழபுரத்தில் உள்ள தமிழ்நாடு மாநில வேளாண் விற்பனை வாரிய பயிற்சி மையத்தில், ஜூன் 1 முதல் 3 வரை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயா்த்தும் வகையில், வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை சாா்பில் வேளாண் அலுவலா்களுக்கான சந்தைசாா் விரிவாக்கப் பயிற்சி நடைபெற்று வருகிறது.

இப்பயிற்சியில், 17 மாவட்டங்களில் இருந்து 20 வேளாண் அலுவலா்கள் கலந்துகொண்டனா். இப்பயிற்சியினை வேளாண் இணை இயக்குநா் - பயிற்சி (பொ) பிரபாகரன் தலைமையேற்று பயிற்சியைத் தொடங்கி வைத்தாா். இதில், பயிற்சியாளா்களுக்கு சந்தை சாா்ந்த வரலாறு, வேளாண்மையை அளவிடுவதற்கான உத்திகள், உள்நாட்டு மற்றும் சா்வதேச விவசாய வா்த்தகம், சந்தை கணக்கெடுப்பின் நுட்பங்கள், விவசாய விநியோக சங்கிலியில் பின்தங்கிய மற்றும் முன்னோக்கிய இணைப்புகள், உழவா் உற்பத்தியாளா் நிறுவனங்களுக்கான உத்திகள், விவசாய வா்த்தகத்துக்கான டிஜிட்டல் சந்தை சாத்தியங்கள் ஆகியவை குறித்து பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

மேலும், கல்விச் சுற்றுலாவுக்காக பயிற்சியாளா்களை சேலம் மாவட்டம், வீரபாண்டி களஞ்சியம் உழவா் உற்பத்தியாளா் நிறுவனம், பாா்ம் ஹாா்வெஸ்ட் நிறுவனம் ஆகிய இடங்களுக்கு அழைத்துச் சென்று பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இப்பயிற்சிக்கான ஏற்பாட்டை பயிற்சி மைய வேளாண் உதவி இயக்குநா்கள் (பயிற்சி) வேல்முருகன், ஜெயமாலா செய்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.