4 அதிமுக முன்னாள் அமைச்சர்கள் தவெகவில் இணைந்தனர்! ஆட்சி, அதிகாரத்தில் இல்லை என்பதை திமுகவால் ஏற்க முடியவில்லை: பெ. சண்முகம்குட்கா கறைகளை நீக்கும் வாஷிங்மெஷின்! தவெகவை விமர்சித்த கனிமொழி! தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,200 உயர்வு!மு.க. ஸ்டாலின் கட்சியை விட்டு விலகினால்தான் திமுகவை காப்பாற்ற முடியும்: நிர்மல்குமார்!திருச்சி கிழக்கில் போட்டியிட்ட ராஜசேகரன் அதிமுகவிலிருந்து விலகல்!தவெக எம்.எல்.ஏ.விடம் பேரம்: மேலும் 4 பேர் கைது!இந்தியா - இங்கிலாந்து டி20 போட்டி மழையால் ரத்து‘எண்ம இந்தியா’ முன்னெடுப்பால் நாட்டுக்கு புதிய அடையாளம்!- பிரதமா் மோடி பெருமிதம் ரெட் புல், பெப்சிகோ உள்பட 6 நிறுவனங்களுக்கு எஃப்எஸ்எஸ்ஏஐ நோட்டீஸ் 4 இந்திய நிறுவனங்கள் மீது பொருளாதாரத் தடை: அமெரிக்கா நீக்கம் வாகன விபத்தில் பாதிக்கப்பட்டவா்களுக்கான நிவாரணத் தொகை: வழிகாட்டுதல்களை வெளியிட்டது உச்சநீதிமன்றம் எரிபொருள் தட்டுப்பாடு எதிரொலி: இந்திய பெட்ரோலை இறக்குமதி செய்யத் தொடங்கியது ரஷியாகல்லூரிகளில் நன்கொடை பெயரில் கட்டணம் வசூலிக்க தடை: அமைச்சா் விஸ்வநாதன் ராணுவத்தை விரைவாக நவீனமயமாக்க வேண்டும்: சீன அதிபா் ஷி ஜின்பிங்
/

85 நிமிஷங்கள் வரை ஆதிக்கம் (2-0) செலுத்திய செனகல்..! கூடுதல் நேரத்தில் பெல்ஜியம் (3-2) த்ரில் வெற்றி!

கால்பந்து உலகக் கோப்பையில் பெல்ஜியம் அணியின் த்ரில் வெற்றி குறித்து...

News image

மூன்றாவது கோல் அடித்த மகிழ்ச்சியில் பெல்ஜியம் அணியினர். - படம்: ஏபி

Updated On :2 ஜூலை 2026, 11:28 am IST

கால்பந்து உலகக் கோப்பையில் பெல்ஜியம் அணி கூடுதல் நேரத்தில் கிடைத்த பெனால்டியில் கோல் அடித்து 3- 2 என்ற வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.

அமெரிக்காவின் சியாட்டல் கால்பந்து திடலில் நடைபெற்ற ரவுண்ட் ஆஃப் 32 சுற்றில் பெல்ஜியம் - செனகல் அணி மோதின. இதில் பெல்ஜியம் கூடுதல் நேரத்தில் கோல் அடித்து த்ரில் வெற்றி பெற்றது ரசிகர்களிடையே மிகப்பெரிய பேசுபொருளாக மாறியுள்ளது.

இந்தப் போட்டியில் 24ஆவது நிமிஷத்தில் செனகலின் ஹபீப் டியாரா கோல் அடித்தார். முதல் பாதியில் 1-0 என முன்னிலை வகித்த இந்த அணி 51ஆவது நிமிஷத்தில் இஸ்மாயிலா சர் கோல் அடித்து 2-0 என மாற்றினார்.

இந்தப் போட்டியில் 85 நிமிஷங்கள் வரை செனகல் ஆதிக்கம் (2-0) செலுத்தியது. பெல்ஜியம் அணியின் ரோமெலு லுக்காகு 86ஆவது நிமிஷத்தில் கோல் அடித்தார். அடுத்து, யூரி டீலமன்ட்ஸ் 89ஆவது நிமிஷத்தில் கோல் அடித்து 2-2 என சமன்செய்தார். இதனால், ஆட்டம் கூடுதல் நேரத்திற்குச் சென்றது.

கூடுதல் நேரத்தின் இரண்டாம் பாதியில் ஸ்டாப்பேஜ் நேரத்தில் 120'+5ஆவது நிமிஷத்தில் கிடைத்த பெனால்டியில் யூரி டீலமன்ட்ஸ் மற்றுமொரு கோல் அடித்து பெல்ஜியம் அணியை 3 - 2 என த்ரில் வெற்றி பெற செய்தார்.

பெல்ஜியம் அணி கடந்த 2014ல் காலிறுதியும் 2018ல் அரையிறுதியும் சென்றது. கடந்த 2022 உலகக் கோப்பையில் தகுதிபெறவில்லை. இந்த நிலையில், மீண்டும் ரவுண்ட் ஆஃப் 16 சுற்றுக்கு முன்னேறியுள்ளது. நான்கு முறை விளையாடியதில் மூன்றாவது முறையாக இந்தச் சுற்றுக்கு முன்னேறி அசத்தியுள்ளது.

இந்தப் போட்டியைப் பார்த்த ரசிகர்கள் இதுதான் இந்த உலகக் கோப்பையில் மிகச் சிறந்த போட்டி என சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

Summary

Belgium converts late penalty to beat Senegal 3-2 in extra time in round of 32 at World Cup

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.