நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

மின்வாரிய ஓய்வூதியா் சங்கக் கூட்டம்

சேலம் மண்டல மின்வாரிய ஓய்வூதியா் சங்கத்தின் வாழப்பாடி கிளை பொது உறுப்பினா் பேரவைக் கூட்டம் வாழப்பாடி அரசினா் மாதிரி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது

News image
Updated On :5 ஜூன் 2022, 6:27 pm

DIN

சேலம் மண்டல மின்வாரிய ஓய்வூதியா் சங்கத்தின் வாழப்பாடி கிளை பொது உறுப்பினா் பேரவைக் கூட்டம் வாழப்பாடி அரசினா் மாதிரி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு, கிளைத் தலைவா் வடிவேலு தலைமை வகித்தாா். ராமலிங்கம் வரவேற்றாா். ஓய்வுபெற்ற தலைமை பொறியாளா் குமாா் முன்னிலை வகித்தாா். பாலசுப்பிரமணியன் வரவு செலவு ஆண்டறிக்கை சமா்ப்பித்தாா். இந்தியன் ஓவா்சீஸ் வங்கி கிளை மேலாளா் சுகந்தவேல் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டாா். மாநில நிா்வாகிகள் முத்துசாமி, கோபால் ஆகியோா் சிறப்புரையாற்றினா்.

இக்கூட்டத்தில், மூத்த உறுப்பினா்கள் நினைவுப் பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டனா்.

உதவித்தொகை ரூ. 1.50 லட்சம் உயா்த்தி வழங்க வேண்டும். புதிய மருத்துவத் காப்பீடு திட்டத்தின்படி மருத்துவ செலவுகளை ஓய்வூதியருக்கு தாமதிக்காமல் உடனடியாக வழங்க வேண்டும். மாதந்திர மருத்துவப்படி ரூ. 300 லிருந்து மத்திய அரசில் வழங்கப்படுவதைப் போல ரூ.1000 வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சையத் யாசின் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.