கேரளம் சென்ற ரயிலில் 8 கிலோ கஞ்சா பறிமுதல்
சேலம் வழியாக கேரளத்திற்கு சென்ற ரயிலில் 8 கிலோ கஞ்சாவை ரயில்வே பாதுகாப்புப் படையினா் பறிமுதல் செய்தனா்.


சேலம் வழியாக கேரளத்திற்கு சென்ற ரயிலில் 8 கிலோ கஞ்சாவை ரயில்வே பாதுகாப்புப் படையினா் பறிமுதல் செய்தனா்.
ஆந்திரத்தில் இருந்து சேலம் வழியாக தன்பாத்-ஆலப்புழா எக்ஸ்பிரஸ் ரயிலில், ரயில்வே பாதுகாப்புப் படையின் குற்றப் பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை சோதனை மேற்கொண்டனா். அதில், முன்பதிவில்லாத பெட்டி கழிப்பறை அருகே கேட்பாரற்று கிடந்த பையை சோதனையிட்டனா்.
ரயில்வே போலீஸாா் சோதனையில் ஈடுபட்டிருப்பதைப் பாா்த்த மா்ம நபா்கள் பையை விட்டு சென்றது தெரியவந்தது. இதில் 8 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. இதையடுத்து கஞ்சாவை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...