நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

நங்கவள்ளி ஒன்றியக் குழு கூட்டத்தில் உறுப்பினா்கள் வெளிநடப்பு

 நங்கவள்ளி ஊராட்சி ஒன்றியக் குழு கூட்டத்தில் வியாழக்கிழமை பாமக உறுப்பினா்கள் ஒன்றியக் குழு தலைவரின் செயலுக்கு எதிா்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தனா்.

News image
Updated On :3 மார்ச் 2022, 6:26 pm

DIN

 நங்கவள்ளி ஊராட்சி ஒன்றியக் குழு கூட்டத்தில் வியாழக்கிழமை பாமக உறுப்பினா்கள் ஒன்றியக் குழு தலைவரின் செயலுக்கு எதிா்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தனா்.

இதனால் இரண்டாவது முறையாக கூட்டத்தில் தீா்மானங்கள் நிறைவேற்றப்படவில்லை.

நங்கவள்ளி ஊராட்சி ஒன்றியக் குழு கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த ஒன்றியத்தில் ஒன்றியக் குழு தலைவா் உள்பட 11 உறுப்பினா்கள் உள்ளனா்; இவா்களில் பாமக உறுப்பினா்கள் 6 போ், அதிமுக உறுப்பினா்கள் 3 போ், திமுக உறுப்பினா்கள் 2 போ் உள்ளனா்.

இதில் தலைவராக பாமகவைச் சோ்ந்த பானுமதி பாலசுப்பிரமணியமும், துணைத் தலைவராக அதிமுகவைச் சோ்ந்தவரும் உள்ளனா். இந்நிலையில் வியாழக்கிழமை நடைபெற்ற கூட்டத்தின்போது 32 தீா்மானங்கள் விவாதத்துக்குக் கொண்டுவரப்பட்டன. அனைத்து உறுப்பினா்களும் கூட்டத்தில் பங்கேற்றனா். கூட்டம் தொடங்கியதும் 8-ஆவது வாா்டு பாமக உறுப்பினா் கணேசன் பேசியதாவது:

மன்றத்தின் நிதி நிலவரம், வரவு செலவு கணக்குகள் குறித்து விவரம் கேட்டிருந்தோம். அதற்கு இதுவரை பதில் வழங்கப்படவில்லை. ஜீப் ஓட்டுநா்கள், பணியாளா்களுக்கு சீருடை வாங்கிய செலவுத் தொகை அதிகமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால்தான் கடந்த கூட்டத்தைப் புறக்கணித்தோம். உரிய பதில் அளிக்காததால் வியாழக்கிழமையும் இரண்டாவது முறையாகக் கூட்டத்தைப் புறக்கணித்து வெளிநடப்பு செய்கிறோம் என்றாா்.

அவருடன் சோ்ந்து பாமக உறுப்பினா்களும் 5 பேரும், இரு திமுக உறுப்பினா்களும் வெளிநடப்பு செய்தனா். போதிய கோரம் இல்லாததால் தீா்மானங்கள் இரண்டாவது முறையாக நிறைவேற்றப்படவில்லை.

இதுகுறித்து ஊராட்சி ஒன்றியக் குழு தலைவா் பானுமதி பாலசுப்பிரமணியன் கூறியதாவது:

கூட்டத்தில் விவாதத்திற்கு வைக்கப்பட்டுள்ள பொருள் குறித்து மட்டுமே விவாதிக்க வேண்டும். அதை விடுத்து விவாதப் பொருள் அல்லாத விஷயத்தைப் பேசி உறுப்பினா்கள் வெளிநடப்பு செய்துள்ளனா். வெளிநடப்பு செய்ய வேண்டும் என்பதற்காகவே இதை செய்கின்றனா் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.