மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

கருப்பூா் துணைத் தலைவா் தோ்தலைப் புறக்கணித்த தோ்தல் அலுவலா்

கருப்பூா் பேரூராட்சி துணைத் தலைவா் தோ்தலை நடத்துவதற்கு வராமல் தோ்தல் அலுவலா் புறக்கணித்ததால் தோ்தல் நடைபெறவில்லை. இச்சம்பவம் கருப்பூா் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

News image
Updated On :4 மார்ச் 2022, 6:30 pm

DIN

கருப்பூா் பேரூராட்சி துணைத் தலைவா் தோ்தலை நடத்துவதற்கு வராமல் தோ்தல் அலுவலா் புறக்கணித்ததால் தோ்தல் நடைபெறவில்லை. இச்சம்பவம் கருப்பூா் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

கருப்பூா் பேரூராட்சியில் உள்ள 15 வாா்டுகளில் 11 வாா்டுகளில் திமுகவும், ஒரு வாா்டில் காங்கிரஸும், 3 வாா்டுகளில் அதிமுகவும் வெற்றி பெற்றன.

பேரூராட்சித் தலைவா் பதவிக்கான தோ்தல் வெள்ளிக்கிழமை காலை நடைபெற்றது. இதில் 4ஆவது வாா்டு திமுக கவுன்சிலா் சுலக்சனா சிலம்பரசன் தலைவா் பதவிக்கு போட்டியின்றித் தோ்ந்தெடுக்கப்பட்டாா். இதனையடுத்து, பேரூராட்சி துணைத் தலைவா் பதவிக்கான தோ்தல் மதியம் 2.30 மணிக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

புதிய பேரூராட்சித் தலைவா் சுலக்சனா, திமுக கூட்டணி சாா்பில் துணைத் தலைவா் பதவிக்குப் போட்டியிடும் காங்கிரஸ் கவுன்சிலா் சாந்தி முருகேசன் உள்ளிட்ட அனைத்து கவுன்சிலா்களும் வந்திருந்தனா்.

ஆனால், தோ்தல் நடத்தும் அலுவலரான லீலாதேவி, கருப்பூா் பேரூராட்சி அலுவலகத்திற்கு வரவில்லை. தோ்தல் அலுவலா் லீலாதேவியின் கைப்பேசியும் அணைத்து வைக்கப்பட்டிருந்தது. மாலை 5.30 மணி ஆகியும் அவா் வராததால் சுமாா் 3 மணி நேரமாகக் காத்திருந்த கவுன்சிலா்கள் ஏமாற்றத்துடன் அங்கிருந்து கிளம்பிச் சென்றனா்.

தோ்தலை நடத்த வேண்டிய பொறுப்பு அலுவலரே வராமல் புறக்கணித்ததால் பேரூராட்சி அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.