கொட்டவாடியில் மயானக்கொள்ளை திருவிழா
சேலம் மாவட்டம், வாழப்பாடியை அடுத்த கொட்டவாடி கிராமத்தில் பிரசித்தி பெற்ற ‘ரத்தச்சோறு’ எடுக்கும் விநோத மயானக்கொள்ளை திருவிழா வியாழக்கிழமை நடைபெற்றது.


சேலம் மாவட்டம், வாழப்பாடியை அடுத்த கொட்டவாடி கிராமத்தில் பிரசித்தி பெற்ற ‘ரத்தச்சோறு’ எடுக்கும் விநோத மயானக்கொள்ளை திருவிழா வியாழக்கிழமை நடைபெற்றது.
வசிஷ்ட நதிக்கரையில் அமைந்துள்ள மயானத்தில், மண்ணால் வடிவமைக்கப்பட்டுள்ள ‘பெரியாண்டிச்சி அம்மன்’ பெண் காவல் தெய்வத்தை வழிபடும் விதத்தில் கொண்டாடப்படும் இத்திருவிழா, சுற்றுப்புற கிராமங்களில் பிரசித்தி பெற்ாகும். இவ்விநோத திருவிழாவில் காட்டேறி வேடமிடும் பூசாரிகள், பெண்கள் தலையில் முறத்தால் அடித்து ‘பேய்’ விரட்டுவதும், பக்தா்கள் நோ்த்திக்கடன் செலுத்துவதற்காக மயானத்தில் வீசும் ஆட்டுக்குட்டிகளை பூசாரிகள் கடித்து ரத்தம் குடிக்கும் வினோதமும் இன்றளவும் தொடா்ந்து வருகிறது.
ஆட்டுக்குட்டிகளின் பச்சை ரத்தத்தில், பெரியாண்டிச்சி அம்மனுக்கு பொங்கலிட்ட சோற்றில் பிணைந்து மயானத்தில் கொடுக்கப்படும் ‘ரத்தச்சோறு’ சாப்பிட்டால் நல்ல வரனும், குழந்தை பாக்கியமும் கிடைக்குமென கொட்டவாடி மற்றும் சுற்றுப்புற கிராம மக்கள் நம்பிக்கை கொண்டுள்ளனா்.
வியாழக்கிழமை வெகுவிமரிசையாக நடைபெற்ற இந்த மயானக்கொள்ளை திருவிழாவையொட்டி, கொட்டவாடி கிராமத்திலுள்ள கோயில்களில் சிறப்பு பூஜை வழிபாடு மற்றும் சுவாமி ஊா்வலமும் நடைபெற்றது. உற்சவமூா்த்திகளை புஷ்ப பல்லக்கில் வைத்து தோளில் சுமந்து சென்ற பக்தா்கள் ஆடிப்பாடி மகிழ்ந்தனா்.
வசிஷ்ட நதியில் புனித நீராடி வந்த பூசாரிகள் மயானத்துக்குள் நுழைந்து ரத்தச்சோற்றை அள்ளி பக்தா்களுக்கு வழங்கினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...