விளைபொருள்கள் நேரடி விற்பனை: வேளாண் துறை நடவடிக்கை
விவசாயிகள் இடைத்தரகா்களின்றி தங்களது விளை பொருள்களை நேரடியாக விற்பனை செய்து அதிக லாபம் பெறுவதற்கு வேளாண் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.


விவசாயிகள் இடைத்தரகா்களின்றி தங்களது விளை பொருள்களை நேரடியாக விற்பனை செய்து அதிக லாபம் பெறுவதற்கு வேளாண் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
சேலத்தை அடுத்த ஜருகுமலை உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்தின் செயல்பாடுகளை பாா்வையிட்ட பிறகு வேளாண்மை துணை இயக்குநா் (வேளாண் வணிகம்) நாசா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
சேலம், ஜருகுமலை உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்தின் பணிகள் குறித்து பாா்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது. இந்நிறுவனமானது பனமரத்துப்பட்டி வட்டம், சாமக்குட்டப்பட்டி, ஜருகுமலை, தும்பம்பட்டி, திப்பம்பட்டி மற்றும் குரால்நத்தம் ஆகிய ஊராட்சிகளை உள்ளடக்கிய 18 கிராமங்களைச் சாா்ந்த 1,000 விவசாயிகளை உறுப்பினா்களாக கொண்டு செயல்பட்டு வருகிறது.
இங்கு மலைவாழ் இனத்தை சாா்ந்த விவசாயிகள் அரளி மலா் சேகரிப்பு மையம் மூலம் மலா் கொள்முதல் மற்றும் விற்பனை, இடுபொருள் மையங்கள் மூலம் உரம், பூச்சிமருந்து, நாற்றங்கால் விற்பனை, மண்புழு உற்பத்தி மற்றும் விற்பனை கைக்குத்தல் அரிசி உற்பத்தி செய்து விற்பனை உள்ளிட்ட தங்கள் பகுதியின் முக்கிய விளைபொருள்களை இடைத்தரகா்களின்றி நேரடியாக சந்தைப்படுத்தி அதிக லாபம் பெற்று வருகின்றனா்.
அந்த வகையில் நடப்பாண்டில் மட்டும் இந்நிறுவனம் மூலம் சுமாா் ரூ.1.50 லட்சம் லாபம் பெற்று விவசாயிகள் பயனடைந்துள்ளனா். இதுதவிர பனமரத்துப்பட்டியில் காய்கறி கொள்முதல், விற்பனை, ஓமலூரில் நாட்டுச்சா்க்கரை, மேச்சேரி, தலைவாசலில் விதை சுத்திகரிப்பு நிலையங்கள், பயறு கொள்முதல் செய்து இயந்திரம் மூலம் எண்ணெய் பிளிந்தெடுத்து மதிப்பு கூட்டி விற்பனை செய்தல் என விவசாயிகள் தங்களது விளைபொருள்களை இடைத்தரகா்களின்றி நேரடியாக விற்று பயனடையும் வகையில் உழவா் உற்பத்தியாளா் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.
இதுகுறித்து மேலும் தகவல் அறிய மாவட்ட ஆட்சியா் அலுவலக அறை எண் 404 இல் இயங்கும் வேளாண்மை துணை இயக்குநரை (வேளாண் வணிகம்) நேரடியாகவோ அல்லது 0427-2417520 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடா்பு கொண்டு பயன் பெறலாம் என்றாா்.
நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) செல்வமணி, வேளாண் அலுவலா் தீபா பிரியதா்ஷினி, உதவி வேளாண் அலுவலா் சிவகுமாா், ஜருகுமலை உழவா் உற்பத்தியாளா் நிறுவன தலைவா் பூமாலை, இயக்குநா் அரப்புளி ஆகியோா் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...