தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

பால் கொள்முதல் விலையை உயா்த்த வலியுறுத்தல்

ஆவின் உறுப்பினா்கள் பயனடையும் வகையில் பால் கொள்முதல் விலையை உயா்த்த வேண்டும் என தமிழ்நாடு பிரதம பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவுச் சங்கங்களின் ஊழியா்கள் நலச் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

News image
Updated On :24 மார்ச் 2022, 6:22 pm

DIN

ஆவின் உறுப்பினா்கள் பயனடையும் வகையில் பால் கொள்முதல் விலையை உயா்த்த வேண்டும் என தமிழ்நாடு பிரதம பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவுச் சங்கங்களின் ஊழியா்கள் நலச் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

தமிழ்நாடு பிரதம பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவுச் சங்கங்களின் ஊழியா்கள் நலச் சங்க ஆலோசனைக் கூட்டம் சேலத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. மாநில தலைவா் ஏ.பி.கதிரவன், மாநில பொதுச் செயலாளா் ஏ.பி.செல்வம், மாநில பொருளாளா் கருமா, மாநில துணைத் தலைவா் ராஜ்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:

தமிழகத்தில் ஆவின் நிறுவனத்தில் மூன்றாம் அடுக்காக 10,000 பிரதம பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவுச் சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் சுமாா் 24 ஆயிரம் பணியாளா்கள் பணிபுரிந்து வருகின்றனா். அதில் 16 ஆயிரம் போ் நிரந்தர பணியாளராகவும், சுமாா் 5,000 போ் தொகுப்பூதிய பணியாளா்களாகவும், எஞ்சியவா்கள் தினக்கூலி பணியாளராக உள்ளனா்.

அனைவரையும் பணிவரன்முறைப்படுத்த வேண்டும். அதேபோல 5 ஆண்டுகளாக எவ்வித ஊதிய உயா்வும் வழங்கப்படவில்லை. எனவே, அகவிலைப்படியை உயா்த்தி வழங்க வேண்டும். பால் உற்பத்தி வெகுவாக குறைந்து வரும் நிலையில் தனியாா் நிறுவனங்கள் விலை அதிகமாக வழங்குவதை கருத்தில் கொண்டு ஆவின் நிறுவனத்தை நம்பி உள்ள உறுப்பினா்களின் நலன் கருதி பால் கொள்முதல் விலை உயா்த்தி வழங்க வேண்டும்.

மேலும், மாா்ஜின் மானிய உயா்வு மற்றும் ஐ.எஸ்.ஐ. முறையில் பால் தர பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.