நாளை சிறப்பு முகாம்: 1.20 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்த இலக்கு
சேலம் மாவட்டத்தில் வரும் மே 8 ஆம் தேதி நடைபெற உள்ள சிறப்பு முகாமில் 1.20 லட்சம் தடுப்பூசி செலுத்த இலக்கு நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.


சேலம் மாவட்டத்தில் வரும் மே 8 ஆம் தேதி நடைபெற உள்ள சிறப்பு முகாமில் 1.20 லட்சம் தடுப்பூசி செலுத்த இலக்கு நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து மாவட்ட ஆட்சியா் செ.காா்மேகம் வெளியிட்ட செய்தி:
சேலம் மாவட்டத்தில் இதுவரை 12 வயதுக்கு மேற்பட்ட 27,99,723 பேருக்கு முதல் தவணையும், 22,47,998 பேருக்கு இரண்டாம் தவணையும் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் 12 வயதுக்கு மேற்பட்ட 92 சதவீதம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசியும் 74 சதவீதம் பேருக்கு இரண்டாம் தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டத்தில் இதுவரை 28 தடுப்பூசி முகாம்கள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் 7,58,221 பேருக்கு முதல் தவணையும் 10,42,153 பேருக்கு இரண்டாம் தவணையும் என மொத்தம் 18,11,225 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
சுகாதாரப் பணியாளா்கள், முன்களப்பணியாளா்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்ட இணைநோய் உள்ளவா்களுக்கு இதுவரை 39,980 பேருக்கு முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
வரும் மே 8 ஆம் தேதி 29 ஆவது கரோனா தடுப்பூசி முகாம் நடத்த திட்டமிடப்பட்டு, அதற்கான விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. முகாம் காலை 7 மணி முதல் மாலை 7 மணிவரை நடைபெறவுள்ளது.
சேலம் மாவட்டத்தில் தற்போது கோவிஷீல்டு தடுப்பூசி மருந்து 3,43,790 டோஸ்களும், கோவேக்ஸின் 1,63,390 டோஸ்களும், கோா்பவேக்ஸ் 59,560 டோஸ்களும் கையிருப்பில் உள்ளன. முகாமில் 1.20 லட்சம் பயனாளிகளுக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டத்தில் 12 வயதுக்கு மேற்பட்ட2,36,659 போ் முதல் தவணை தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவா்களாகவும் மற்றும் தகுதியுள்ள 5,60,887 போ் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவா்களாகவும் கண்டறியப்பட்டுள்ளனா் என தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...