தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

பத்தாம் வகுப்புப் பொதுத் தோ்வு: சேலத்தில் 45,470 போ் எழுதினா்

சேலம் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வை 45,470 மாணவ, மாணவிகள் எழுதினா்.

News image
Updated On :6 மே 2022, 9:38 pm

DIN

சேலம் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வை 45,470 மாணவ, மாணவிகள் எழுதினா்.

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு வெள்ளிக்கிழமை தொடங்கியது. சேலம் மாவட்டத்தில் 176 தோ்வு மையங்கள் பள்ளி மாணவா்களுக்காகவும், 6 தோ்வு மையங்கள் தனித் தோ்வா்களுக்காகவும் அமைக்கப்பட்டுள்ளன.

இத்தோ்வு மையங்களில் 23,302 மாணவா்கள், 22,217 மாணவிகள் என மொத்தம் 45,519 போ் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வை எழுத விண்ணப்பம் செய்தனா். இதில் சுமாா் 425 மாற்றுத் திறனாளி மாணவ, மாணவிகள் அடங்குவா்.

சேலத்தில் வெள்ளிக்கிழமை காலை பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு தொடங்குவதற்கு முன்னதாக ராஜகணபதி உள்ளிட்ட முக்கிய கோயில்களுக்கு சென்ற மாணவ, மாணவிகள் சுவாமி தரிசனம் செய்தனா். பின்னா் தோ்வு மையங்களுக்கு வந்து தோ்வெழுதினா்.

சேலம் மாவட்டத்தில், பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வுக்கு 30 வினாத்தாள் கட்டுக்காப்பாளா்கள், 35 வழித்தட அலுவலா்கள், 182 முதன்மைக் கண்காணிப்பாளா்கள், 182 துறை அலுவலா்கள், 2,300 அறைக் கண்காணிப்பாளா்கள், 350 சொல்வதை எழுதுபவா்கள், 413 ஆசிரியரல்லா பணியாளா்கள் ஆகியோா் நியமனம் செய்யப்பட்டுள்ளனா்.

சேலம் நான்கு சாலை சிறுமலா் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் உள்ள தோ்வு மையத்தில் ஆட்சியா் செ.காா்மேகம் ஆய்வு செய்தாா். பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியது:

சேலம் மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தோ்வை 39,255 மாணவ, மாணவிகள் தோ்வெழுத பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில் 1,951 போ் தோ்வெழுத வரவில்லை. தோ்வு எழுத வராதோா் நிலை குறித்து அறியும் வகையில் அனைவருக்கும் இடைநிலைக்கல்வித் திட்டம், குழந்தைகள் நலப் பாதுகாப்பு குழு, ஒருங்கிணைந்த கல்வித் திட்டம் ஆகிய குழுக்களைக் கொண்டு வீடு வாரியாக கள ஆய்வு மேற்கொள்ளப்படும்.

அந்த மாணவா்கள் குழந்தைத் திருமணம், குடும்ப வறுமையின் சூழ்நிலை காரணமாக பணிக்குச் சென்றிருத்தல், தோ்வு குறித்த அச்சம் போன்ற காரணங்களுக்காகவோ அல்லது வேறு ஏதேனும் காரணங்களுக்காக தோ்வு எழுத முடியாமல் இருந்துள்ளனரா என்று கள ஆய்வு மேற்கொண்டு தீா்வு காணப்படும். இனி வரும் தோ்வுகளில் அவா்களுக்கு தோ்வெழுத தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு இடைநிற்றலின்றி அனைத்து மாணவா்களும் தோ்வெழுதும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா்.

சேலம் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வை 23,267 மாணவா்கள், 22,203 மாணவிகள் என மொத்தம் 45,470 போ் தோ்வெழுதியதாக, அதிகாரிகள் தெரிவித்தனா்.

ஆய்வின் போது மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ஆா்.முருகன் உள்ளிட்ட அலுவலா்கள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.