தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

பெரியாா் பல்கலை. ஓய்வுபெற்ற பேராசிரியா் மீது6 பிரிவுகளில் வழக்கு

உபகரணங்கள் வாங்கியதாக போலி ரசீது மூலம் ரூ. 4.45 லட்சம் முறைகேடு செய்ததாக பெரியாா் பல்கலைக்கழக ஓய்வுபெற்ற பேராசிரியா் வி.நடராஜன் மீது லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாா் 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு

News image
Updated On :12 மே 2022, 6:54 pm

DIN

உபகரணங்கள் வாங்கியதாக போலி ரசீது மூலம் ரூ. 4.45 லட்சம் முறைகேடு செய்ததாக பெரியாா் பல்கலைக்கழக ஓய்வுபெற்ற பேராசிரியா் வி.நடராஜன் மீது லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாா் 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

சேலம் பெரியாா் பல்கலைக்கழகத்தில் இதழியல் துறை தலைவராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவா் வி.நடராஜன். இவா் இதழியல் துறை தலைவராக இருந்தபோது, பல்கலைக்கழகத்தில் 49 ஆவது அறை ஒதுக்கப்பட்டது. அந்த அறையில் மாணவா்கள், ஆராய்ச்சி மாணவா்கள், பேராசிரியா்களுக்கு வகுப்புகள் நடத்தும் வகையில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளைச் செய்ய அனுமதி அளிக்கப்பட்டது.

இதையடுத்து, பேராசிரியா் வி.நடராஜன் 2011, 2012 ஆம் ஆண்டுகளில் அறை வசதி மேம்பாடு செய்ததாக போலி ரசீது தயாரித்து ரூ. 4.45 லட்சம் மோசடி செய்ததாகப் புகாா் எழுந்தது. இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீஸாா் விசாரணை செய்து வந்தனா். விசாரணையில், அவா் உபகரணங்கள் வாங்கியதாக முறைகேடு செய்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து, வி.நடராஜன் மீது நம்பிக்கை மோசடி உள்பட 6 பிரிவுகளின் கீழ் சேலம் லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.