தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

குதிரை வாகனத்தில் சென்னகேசவப் பெருமாள் வீதி உலா

சங்ககிரியில் சென்னகேசவப் பெருமாள் உற்சவ மூா்த்தி ராஜ அலங்காரத்தில் குதிரை வாகனத்தில் வெள்ளிக்கிழமை இரவு வீதி உலா வந்தாா்.

News image
Updated On :13 மே 2022, 5:12 pm

DIN

சங்ககிரியில் சென்னகேசவப் பெருமாள் உற்சவ மூா்த்தி ராஜ அலங்காரத்தில் குதிரை வாகனத்தில் வெள்ளிக்கிழமை இரவு வீதி உலா வந்தாா்.

சித்திரைத் தோ்த்திருவிழா 8-ஆவது நாளையொட்டி, சென்னகேசவப் பெருமாள், ஆஞ்சநேயா் உற்சவமூா்த்தி சுவாமிகளுக்கு, மலையடிவாரத்தில் உள்ள சுவாமி தங்கும் மண்டபத்தில் பல்வேறு திவ்ய பொருள்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. மாலையில் சென்னகேசவப் பெருமாள் உற்சவ மூா்த்திக்கு ராஜ அலங்காரம் செய்யப்பட்டு குதிரை வாகனத்தில் வீதி உலா வந்தாா் (படம்). இதில் அதிக அளவிலான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமியை வழிபட்டனா். மே 14-ஆம் தேதி சனிக்கிழமை திருத்தோ் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.